பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

நீ சிறிதும் கவாைதே வேண்டுமாயின் உன் துயரை அவர் அறி யுமாறு கூறவல்ல தூது ஒன்றை அனுப்பி வைப்போம்” எனக் கூறிஞள்.

தேறுதல்போல் கூறிய தோழியின் சொற்களைச் செவி மடுத்த அப்பெண், அச்சொற்களில் பொதிந்து கிடந்த தோழியின் அறிவுரையைக் கண்டாள்; தான் துயர்படுவதால் நேரவிருக்கும் கேட்டின உணர்ந்தது அவள் உள்ளம். மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கும் பாம்புபோல், அவள் துயர்ஒழிந்து அடங்கி அமைதியுற்றாள்.

கேளா ராகுவர் தோழி! கேட்பின்

விழுமிது கழிவ தாயினும், நெகிழ்நூல் பூச்சேர் அணையில் பெருங்கவின் தொலைந்தநின் நாள்துயர் கெடப்பின் டேலர் மாதோ...’ .

நெஞ்சு விதைகிறது; நான் வருந்துகிறேன்:

இப்பெண்ணின் நிலை இது. இனிப்பொருள் தேடிப் போயிருக்கும் அவள் கணவன் நிலையினைக் காண்போம், விரைவில் வந்துவிடுகிறேன்; வருந்தாதே’ என்று கூறி வந்தி ருந்தான் அவன். வந்தவன் பொருளீட்டும் முயற்சியில் முழுக்க முழுக்க ஆழ்ந்துவிட்டான்; ஒரு வினையை மேற் கொண்டவர் அதே நினேவாய் இருந்து முடித்தல்வேண்டும்; செயல் ஒன்றும் சிந்தை ஒன்றுமாக இருப்பின், மேற்கொண்ட செயல் செவ்வனே முடிவதோ, விரைவில் முற்றுப் பெறு வதோ இயலாது; அதனல் அவன் சிந்தையும் செயலும் அவன் மேற்கொண்டு வந்த வினயிலேயே ஒரு சேரச் சென்று

a குறுந்தொகை : 258. பூங்கண்ணன்.

விழுமிது-சிறந்தபயன்,கழிவதாயினும்.கெடுவதாயினும்; நெகிழ்நூல்-மெல்லிய நூல்; நாள் துயர்- நாள்தோறும் படும் துயர்; நீடலர்-தாங்கார்.