பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

விட்டன; மனேவியின் நினைப்பு முற்றும் மறந்துவிட்டது. மேலும் மனேவியை நினைந்துகொண்டால், அவள் எழில், இளமை, காதல், கண்ணிர் அனைத்தும் தோன்றி அவனைக் கலங்கச் செய்துவிடும்; கலங்கிய சிந்தையோடு செயல்படுவது இயலாது; வினயும் முற்றுப்பெருது; விரைவில் வீடு திரும்பு வதும் இயலாது; ஆதலின் அவன் சிந்தை அவரே நினைக்க அறவே மறுத்துவிட்டது; அவன் காதல் உணர்ச்சியையும் கடமை உணர்வையும் உணர்ந்து அவளுேடு, வந்திருந்த உற்றார் உறவினர்களும், அவன் மனைவிபடும் பிரிவுத் துயர் பற்றி, அவன்பால் ஏதும் அறிவித்திலர்; அறிவித்தல் கூடாது என்பதை அறநெறியாகக் கொண்டனர்; கிழவி நிலையே வினேயிடத்து உரையார்’ என்ற ஆன்றாேர் விதிக்கு மதிப்புத் தந்தனர்; இதல்ை காதலியின் கவலையையோ, அவள் கண்ணி ரையோ, அவளுக்குத் தான் வாக்களித்து வந்ததையோ அவன் கருதினனல்லன்; அவற்றுள் எதுவும் அவன் கருத்தில் எழவில்லை; கடமை ஒன்றே அவன் கண்முன் நின்றது.

கடமையைக் குறைவற நிறைவேற்றி, மேற்கொண்டு வந்த வினையில் வெற்றி கண்டுவிட்டான்; விரும்பி வந்த பெரும் பொருளைச் சேர்த்துவிட்டான்; வெற்றி அவனுக்குப் பெருமிதம் அளித்தது; வெற்றிக் களிப்பில் ஆழ்ந்தது அவன் உள்ளம், ஆனுல் அவ்வின்ப உணர்வு சிறிது பொழுதே; பஈங்கு நான் பெறும் இவ்வின் பத்தை உடன் இருந்து நுகர என் மனைவி என் அருகில் இல்லையே என்ற எண்ணம் எழுந் தது; அவ்வளவே. அவன் மகிழ்ச்சி எங்கோ சென்று மறைந்து விட்டது; மனேவியின் பேரழகு அவள் தன்பால் கொண்டுள்ள கரைகடந்த காதல்; தனக்கு விடை கூறி வழியனுப்பிய பொழுது அவள் விழிக்கடையில் தோன்றிய கண்ணிர்த துளி; அக்கண்ணிர் காட்டிய அவள் அகத்துயர் அவளுக்குத் தான் குறித்து வந்த காலம்; அக்காலம் கடந்து விட்டதைக் கடமை யுணர்வால் தான் மறந்து போனது ஆகிய இவை ஒன்றன்பின் ஒன்றாக வந்து, அவன் அகக் கண் முன் தோன்றி அவனைத் துன்பத்திற்குள்ளாக்கின. தன்னைப் பிரிந்தமையால் அவள் படும்பாடு வாக்களித்தவாறு வந்து சேர்வான் எனும் நினை

கு-1: