பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0

அதைப்போலவே, அத்தேரில் பூட்டிய குதிரைகளும் இயல் பாகவே விரைந்தோடி வல்லவை; தாற்று முள் கொண்டு தாக்கவேண்டிய இன்றியமையாமை அவற்றிற்கு இதுகாறும் நேர்ந்ததில்லை. அத் துணை விரைவுடையன; அம்மட்டோ: எத்துணை நெடுத் தொவைாயினும் சோர்வுருது சென்று சேர வல்ல வன்மையும் வாய்ந்தன; இதை அவன் அறிவான்; என் முலும் நேரிய வழியில் சென்றால், ஊர் அடைய நெடு நாட்க ளாகும்; அத்துணைச் சேய்மைக்கன் உளது அவர்கள் ஊர்; அவ்வழியில் தேரைச் செலுத்தினல், தேர் எவ்வளவுதான் விரைந்தோடிஞலும், கணவன் வருகையை எதிர் நோக்கி எதிர் நோக்கி, ஏமாந்து, அவ்வேமாற்றத்தால் உயிரிழந்து போவானைக் காப்பதோ, அவள் உடலைக் காண்பதோ இய லாது என்பதை உணர்ந்தான். உணர்ந்தும், உரிய காலத் தில் அவள் உயிரிழந்துபோவதற்கு முன்பு ஊர் சென்று, அவள் உயிரைக் காத்தல் வேண்டும் எனத் துணிந்தான்.

தேர் ஒடுமாறு சிறிதே செப்பம் செய்யப்பெற்ற நேர்வழி மகைளைச் சுற்றிக்கொண்டும், காடுகளை வளைத்துக்கொண் டும், காணுறுசளே எளிதில் கடக்கலாம். இனிய இடங்களைத் தேடிக்கொண்டும் செல்வதால் நனி மிக நீண்டுளது; அவ்வழி யில் சென்றால் விரைவில் ஊர் சேர்தல் இயலாது; ஆகவே, அவ்வழி மேற்கொள்வதை மறுத்தது அவன் மனம்; மலைகள் மீது ஏறியும், காடுகளின் ஊடே நுழைந்தும், காணுற்று வெள்ளத்தில் பாய்ந்தும் ஒடினல் ஊர் அணித்தாகும்; உரிய காலத்தில் ஊர் அடைந்து அவளைக் காக்கலாம் எனக் கருதி ஞன். தேரையும் குதிரைகளையும் ஒருமுறை நோக்கினன்; அவை அப்புது வழியில் பாய்ந்தோடுவதற்கேற்ற உறுதியும் உரமும் வாய்ந்து விளங்குவதைக் கண்டான்; உடனே தேரைத் திருப்பிவிட்டான்; செம்மைப்பட்ட வழியை விடுத் துக் கரடு முரடான மேட்டு நிலத்தில் உருண்டோடிற்றுதி தேர்; கல்லேயும் மண்ணையும், காஞற்று வெள்ளத்தையும் பிளந்துகொண்டு விரைந்தது; அவ்வளவுதான்; கணப்பொழு தில், தேர் தவிையின் வீட்டு வாயிலில் வந்து நின்றது.