பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

சர்த்துச் சென்றது. அவ்வின்ப உணர்வில் தன்னை மறந்தான்; இவ்வின் வாழ்க்கை என்றும் நிை பெறுதல் வேண்டும் என விரும்பினுன்; அவ்விருப்பம் மேலும் வளர்ந்தது; தான் வாழ வேண்டுமாயின்; தன்னச் சூழ உள்ளார் அனைவரும் வாழ வேண்டும்; அனைத்துயிரும் வாழவேண்டும்; சுற்றியிருப்போர் துன்பச் சேற்றில் சிக்கிச் சீரழியும்போது தான்மட்டும் இன் புற்று வாழ்தல் இயலாது; ஆகவே அவர்களும் வாழ வேண் டும்; தன்னைப்போலவே அவர்களும் வினையில் வெற்றிகண்டு தத்தம் காதல் மனேவியரோடு கிளித்து வாழ வேண்டும் என விரும்பின்ை; நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என வாழ்த்திற்று அவன் வாய்.

உலகம் வாழ வேண்டும் என விரும்பிய அவன், அவ் வுலகம் வாழவேண்டின், அவ்வுலகில் மழைக் குறைபாடு உண் டாதல் கூடாது; வானம் வழங்கா நாட்டில் வளத்திாேக் காண்பது இயலாது. நாட்டின் நல்வாழ்விற்குப் பெருந்துணை புரிய வல்லது வான் வழங்கும் மை ழயே என உணர்ந்தான், உடனே மனேவியோடும் வெளி வந்து வாகன நோக்கினன்; இரு கைகூப்பி நின்றான்; எடுத்துச் சென்ற விக்சயை இனிதே முடித்துவிட்டு ஈண்டு வந்து இவளோடு இன்புற்று வாழ்கிறேன். நான்; நானும் இவளும், இவ்வாறு கடமையைச் செய்து காதல் உலகில் களித்துத் திரியப் பெருந்துணை புரிந் தோய் நீயே, இவ்வாறு எமக்குத் துணைபுரிந்த நீ, இவ்வுலகில் உள்ள அனைவரும் அனைத்துயிரும் இன் புற்று வாழவும் துணை புரிதல் வேண்டும்; ஆகவே வானமே உலகில் சூழ்ந்துள்ள இருள் நீங்கி ஒளி வீசுமாறு மின்னி, முரசு முழங்கினுற்போல் பல முறை இடித்து, தண்ணெனக் குளிர்ந்த நீர்த்துளிகள் தாரை தாரையாக” வீழுமாறு பெய்து வளம் கொழித்து வாழ்விப்பாயாக என வணங்கி வேண்டிக்கொண்டான். வழங்குக வான், வாழ்க அவன் உள்ளம்.

“தாழ் இருள் துமிய மின்னித் தண்ணென

வீழ்உறை இனிய சிதறி, ஊழின் - கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து இடித்துப் பெய்து இனி வாழியோ பெரு வான்! யாமே