பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iy

படுத்த விரும்பினள். அதற்கு ஏற்ற காலத்தை எதிர் நோக்கியிருந்தாள்.

தமிழ் நாட்டுத் தசிைறந்த நகரங்களுள் குன்றுாரும் ஒன்று. கீழ்க் கடலைச் சார்ந்து விளங்கிய கடற்கரை நகரங் களுள் ஒன்றாகிய அக்குன்றுார், வேளிர் என்ற குறுநிலத் தலைவரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அந்நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் கடலாடு விழா, பழந்தமிழ்ப் பெருவிழாக்களுள் நனிமிகப் பாராட்டற்குரியது. அவ் வாண்டு நடைபெற்ற விழாவிற்கு அப்பரத்தை தன் தோழியர் சிலரோடு சென்றிருந்தாள். விழா நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து வருபவள் கடற்கரைக்கு அணித்தாக, ஒர் அழகிய பொய்கையும் அப்பொய்கைக்கரையில் வானுற வளர்ந்திருந்த ஒரு மாமரத்தையும் கண்டு ஆங்குச் சென்று, அம்மாத்து நிழலில் சிறிது அமர்ந்து இளைப்பாறிஞள். வேனிற்காலம் அது. மரம் நிறைய, கவை மிகு கனிகள் கொத்துக் கொத்தாகக் காய்த்துக் காட்சி அளித்தன. கணிக் அாட்சியைக் கண்டு களித்திருக்குங்கால் பொய்கையை நோக்கி நனி மிக நீண்டு வளர்ந்து, அப்பொய்கை நீரில் படுமாறு தாழ்ந்திருந்த கிளையில் பழுத்திருந்த கனிகளில் ஒன்று காம்பற்றுக் குளத்து நீரில் விழுந்தது. வீழ்ந்த ஒலி கேட்டு அப்பக்கம் திரும்பியவள், அக்கணியைக் குளத்தில் வாழும் வாளைமீன் ஒன்று விரைந்தோடி வந்து வாயாற் கவ்வி விழுங்குவதைக் கண்டாள்; குளக்கரையில் தான் காணும் அக்காட்சிக்கும், தன் வாழ்க்கை நிகழ்ச்சிக்கும் ஒருமைப்பாடு இருக்க உணர்ந்தாள்; அவ்வுணர்வால் அவள் உள் ளம் ஒரு சிறிது அமைதி பெற்றது.

அப்போது தன்னைப்போலவே அவ்விழாக்காணும் கருத் துடையவளாய்த் தன் காதலன் மனைவியின் உயிர்த் தோழியர் சிலரும் வந்திருப்பதைக் கண்டாள். தன் உள்ளத் தூய்மையை, தன்மீது தவறு இல்லை என்பதை அவர்கள் வழியாக அப்பெண்ணுக்கு அறிவிக்க இதுவே ஏற்ற சமயம் என எண்ணிள்ை. அப்பெண்கள் அருகில் அவர் அறியாவாறு