பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iys

சென்று தங்கிளுள்; அவர்கள் வருகையை அறியாதாள் போல, தான் கூறும் ஒவ்வொரு சொல்லும் அவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வரையில் தன் உடன் வந்திருக்கும் தன் தோழியிடம் சில கூறத் தொடங்கினுள்.

தொடங்கியவள், இளைஞன் மனைவி உலகியல் அறி யாதவள் ஆடவர் உள்ளத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவளுக்கு இல்லை என்றும், எப்பொழுதும் இல்லறப் பணியே நினைவாய் இருப்பதால், அவள் வீட்டைவிட்டு வெளியே சென்று வேளிவுலக நிகழ்ச்சிகளே அறிந்திலள். அறிந்திருந் தால், தவறு செய்தவர் யாவர் என்பதை அறியாது வினே தன்னைப் பழித்திராள் எனத் தன் உள்ளம் கருதுகிறது என்பதை அத்தோழியர்க்கு உணர்த்த விரும்பினுள். அதனுல் அவளைக் குறிப்பிடுங்கால், மனேயோள், அதாவது மனேயிலேயே அடங்கிக் கிடப்பவள் என்ற குறியீட்டுப் பெயரால் குறிப்பிட்டுவிட்டுத் தொடர்ந்து பேசத் தொடங் கிளுள்.

தோழி! நம் அன்பர். நம் சேரிக்கு வந்து, நம்பின்திரி கிறார் என்பதையோ நாம் அவரை அடைந்து இன்புறுகின் ருேம் என்பதையோ நாம் மறுக்கவில்லை. ஆனல் அதற்காக நம்மீது வருந்துவதில் பயன் இல்லை. நாமேதும் பிழை செய்ய வில்லை; இது அவள் செய்த பிழையின் விளைவு; ஆனால் அவள் அதை'உணர்த்திலள். உணர்ந்துகொள்ளும் அறிவு அவளுக்கு வாய்க்கவில்லை; அதல்ை அவள் நம்மைப் பழிக்கிருள்; நம் மீது சினம் கொள்கிருள். உண்மையில் பிழை நம்முடைய தாயின், பிழை புரிந்தோர் நாமாயின், தோழி! இதோ நம் முன் கிடந்து அலைவீசும் இக்கடலில் வாழும் அணங்கு நம்மை வருத்தி அழிக்கட்டும். தோழி! அவரைத் தேடி அலைந்து, அவர்மீது காதல் வலை வீசி, அவரை மயக்கி நம்பால் ஈர்த்துக் கொள்ளும் கொடுமையை நாம் புரியவில்லை. நம் சேரிக்கு வரும் வாய்ப்பு அவருக்கு எவ்வாருே கிடைத்துவிட்டது. தன்னைவிட்டு அகலாவாறு அவனேக் காத்துக்கொள்ளமாட் டாது, பரத்தையர் சேரி சென்று திரியுமாறு அவரை விட்டு