பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

கொள்ளவில்லை. துடிதுடித்துத் துன்புற்றது அவள் உள்ளம். இவ்வாறே விட்டுவிட்டால், மனத்துயர் மிகுந்து மாண்டுவிடு வாளோ என அஞ்சிள்ை தோழி. எவ்வாறயினும் அவள் மனக்கவைைய மறக்கடிக்கச் செய்யவேண்டும் என உறுதி பூண்டாள். தன் நயமொழிகள் பயன் தராதுபோன ஆந் நிலையில், பண்டு கையாண்ட ஒருமுறை அவள் நினைவிற்கு வந் தது. பொருள் தேடிப்போன கணவன் விரைவில் வாராமை கண்டு வருந்தியிருக்குங்கால், தான் எவ்வளவு கூறியும் துயர் மறந்து வாழமறுத்தவள், ‘இவளை இவ்வாறு வருந்தவிட்டுப் போன அவனும் ஒர் ஆண்மகளு? அறிவுடைப் பெருமகளு?’’ என அவனைப் பழிக்கவே, தன் கணவனைத் தன்முன் பிறர் பழிக்கத் தானே காரணம் ஆயினமை அறிந்து வெட்கித் துயர் ஒழிந்தநிலை அவள் நினேவிற்கு வந்தது. வரவே மீண் டும் அம்முறையையே கையாளக் கருதினுள். உடனே அவன் உயர்வையும், தன் தாழ்வையும் மறந்து, “ஒழுக்கக்கேடன்: உள்ளத்தில் தூய்மை இல்லாதவன்; காதலியை மறந்து கண்ட பெண்களின் பின் திரியும் காமுகன்’ என்றெல்லாம் அவனேப் பழிக்கத் தொடங்கினுள்.

கணவன் செயல் நினேந்து கலங்கியிருப்பவன் காதுகளுள் தோழியின் சுடு சொற்கள் சென்று தைத்தன. அவள் உள் ளுணர்வு விழிப்புணர்ச்சி கொண்டது. “என் கணவனைப் பிறர் பழிசகுமாறு செய்துவிட்டேனே; என்னே என் அறியாமை கணவன் புகழே கருத்தாய் நிற்பதன்றாே கற்பு டையாளுக்குக் கவின் அளிக்கும். அதை நான் மறந்தேனே, அவனை நானே பழிகறினேன்; அதனல் அவனைப் பழித்தல் பிறர்க்கும் எளிதாயிற்று என் கற்பின் திறம் இருந்தவாறு அன்னே!’ என எண்ணிக் கலங்கினள். கணவன் கைவிட் டான் எனக் கொண்டு கலங்கிய தன் மனக்கலக்கத்தை மறந் தாள். மனயறக் கடமைகளில் மனத்தைச் செல்லவிட் டாள். இளைஞனைப் பழிப்பதைத் தோழி, அந்நிலையிலும் கைவிட்டிலள். அவள் மனத்துயர் முற்றும் மறைய வேண்டும். அதுகாறும் அவனப் பழித்துக் கொண்டிே,