பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

அவள்வாய்திறந்து கேளாதமுன்னரே கொடுத்து இன்புறுத்த வேண்டிய இளைஞன், அவளை வருந்த விடுத்துப் பரத்தை யைத் தேடிச் சென்றுவிட்டான். அத்தகையானேப் பேரன் புடையவன் எனப் பாராட்டுகின்றன நீ; குருவி. இனிமை பயக்கும் தேனடை இருக்க அதை விடுத்து, மணம் தருவதும் இல்லாத மலரைக் கொய்வதை மட்டும் காண்பவர், அது அவ்வாறு செய்வதற்குக் காரணமான, அக்குருவிகளின் வாழ்க்கை வளத்தை அறியமாட்டாமையால், அச்சேவற் குருவியைப் பின்பற்றி, மனேயின்கண் இருந்து இல்லறம் நம்பி இனிமை பயக்கும் இல்லாள் இருக்க, அவளை மறந்து, தன் பால் அன்போ, தன் உள்ளத்தில் கற்புணர்ச்சியோ இல்லாத கீழ்மைக் குணத்தளாய பரத்தையின் பின் திரியும் அறிவற் றுப் போவர்; அத்தகையாருள் உன் தலைவனும் ஒருவன்: அவன்பால், பிறர் கண்டு பாராட்டத்தக்க பண்புகள் எங்கே இருக்கப் போகின்றன?’ எனக் கூருமல் கூறி இளைஞனைப் பழித்தாள்.

1.யாரினும் இனியன்; பேரன் பினனே,

உள்ளுர்க் குரீஇத் துள்ளுங்டைச் சேவல் சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர் தேம் பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாரு வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன் பாணன் வாயே.” a \

aகுறுந்தொகை: 83. வடம வண்ணக்கண் தாமோ தரன்.

பாணன்வாயே இனியன் அன்பினன் என மாற்றுக. ஈன்இல்.கருவுயிர்த்தற்கு ஏற்றஇடம்; இழை இயர்-அமைக் கும்பொருட்டு, தேம்.தேன் அடைகள்; பொதிகொண்டகட்டப்பெற்ற தீம்கழை.இனியகோல்; நாரு-மணக்காத; கொழுதுப்-கோதி எடுக்கும்.