பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 88

குறிப்பு மொழிகளால், இளைஞனின் குறைகளைச் சுட்டிக் காட்டிய தோழி, பின்னர், பாண! உன் தலைவன் பண்பு இத்தகையதாகவும், நீ மட்டும் இளைஞன் எல்லோர்க்கும் இனியன்; எவர் மாட்டும் அன்புடையள் எனப் புகழ்ந்து பாராட்டுகின்றன; இளைஞன் இனியணுதலும், அன்புடைய ளுதலும் உன் வாயளவில் மட்டுமே காணப்படுவதுபோலும்’ என எள்ளி நகைத்து அவன் வேண்டுகோளை மறுத்து, அவ இனப் போக்கிளுள்.

தின் இன்றி வாழும் வகை அறியேம் ஐய!

பாணன் துரது பயனற்றுப் போய்விட்டமை கண்ட இகளஞன், இனி தேரில் நாமே செல்வது நலமாம் எனத் துணிந்தான். அவ்வாறே வந்து வீட்டிற்குள் புகுந்தான். அப்போது, அவன் மனைவி அகமனையிடத்தே இருந்தாள். மனேக்குள் புகுந்து விட்டானேனும், மனைவியைக் காண நடுங்கிற்று, மாசுற்றுப் போன அவன் நெஞ்சு; அதனல் மனே புகாது, தோழியின் துணை நாடி அவள் பால் சென்றான். 4ணித்த மொழிகளால் தன் பிழைகளை ஒப்புக்கொண்டு அவற்றை யெல்லாம் மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டான்; பாணன் வழி விடுத்த அவன் வேண்டுகோளை மறுத்த துணிவு, தோழிக்கு, இளைஞன் நேரில் வந்து நின்று வேண்டியபோது உண்டாகவில்லை.

கணவன் மனைவியர்க்கிடையே பிறக்கும் ஊடலின் இயல்பினைத் தெளிய உணர்ந்தவள் அத்தோழி. கணவன் மனைவிமீது கொள்ளும் சிறு சினமோ, மனைவி கணவன் மீது கொள்ளும் சிறு கினமோ சிறிது பொழுதே இடம் பெறுதல் வேண்டும். அது சிறிது நீளினும், வேறுபாட்டுணர்வு அவர் உள்ளத்தில் வளர்ந்து பெருகிவிடும்; அந்நிக் உண்டாயின், அவர் இருவரும் கூடி வாழ்தல் அறவே இல்லாகிவிடும்; ஆகவே, அச்சினத்தை வளரவிடாது, ஒருவர்க்கு ஒருவர் தாழ்ந்து போதல் வேண்டும். தோழி, காதலர்களின் இம் மன இயல்பினை உணர்ந்திருந்ததல்ை, பரத்தையர் உறவால்