பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

கணவன் மனைவியர்க்கிடையே உண்டாயுள்ள இவ்வெறும் புணர்ச்சியை வளரவிடுவது கூடாது; இருவரும் மீண்டும் ஒன்றுகூடி ஒருமனப்பட்டு வாழத் துணைபுரிதல் வேண்டும்: அவர்கள் அக்கூட்டம்பற்றிக் கருத்தின்றி இருப்பினும், அதை முன்னின்று முயன்று முடிக்கவேண்டிய தான், அவர்கள் தாமாகவே ஒன்றுபடும் அந்நிலைக்கு வரும்பொழுது, அதற் குத் தடையாய் இருத்தல் கூடாது; பிழை உணர்ந்து போக் கிய பாணன் தூது பயனற்றுப் போனதைக்கண்டே கலங்கி யிருப்பவன், நேரில் வந்து வணங்கி நிற்கும் இப்போதும் மறுத்து ஒதுக்கப்பெற்றால் மனம் நொந்துபோவன்; அதனல் இப்பிரிவு நிலையாகவே நிலைத்துவிடின் என்னும் என்றெல் லாம் எண்ணி அஞ்சிளுள்; மேலும், முன்னெருகால் பிழை புரிந்தவர், பின்னர்த் தம் பிழை உணர்ந்து வருந்திப் பொறுத்தருளுமாறு வேண்டுவராயின், அப் பிழைகளைப் பொறுத்து அவரை ஏற்றுக்கொள்வதே மாண்புமிகு பெரி யோர்க்கு மாட்சியாம் எனக் கூறிற்று அவள் உள்ளம். அதனுல் இளைஞனே ஏற்றுக்கொள்வதே நலமாம் எனத் துணிந்தாள்.

இளைஞன ஏற்றுக்கொள்ள இசைந்தாளேனும் தோழி உள்ளம், அவன் கொடுமையால் தாம் உற்ற துயரை மறக்க வில்லை. ஆடவர் கொடுமையே செய்யினும், அவரையேநம்பி வாழவேண்டுமாறு அமைந்துபோன பெண்களின் வாழ்க்கை நிலையை நினைந்து வருந்திற்று; அதனுல் அவனே ஏற்றுக் கொள்ளும் அந்நிலையிலும் வருந்தும் தம் உள்ளத்தை அவ னுக்கு விளங்க உணர்த்தி, அறிவூட்டி, இனியேனும் இத் தகைய பிழைகள் நிகழாவாறு நின்று காப்பாயாக எனக் குறிப்பாகவேனும் அவனுக்குக் கூறி அறிவூட்ட வேண்டும் எனத் துணிந்தாள்.

வாயில் வேண்டி வந்து நிற்பவனே வரவேற்று மனை யகத்தே கொண்டு சென்றாள்; பின்னர் அவனை வணங்கி நின்று, தலைவ! எல்லாம் உணர்ந்த பெரியோன் நீ; நீயே பிழை புரிந்துவிட்டாய், உன் பிழைபட்ட வாழ்வால் நாங்கள்