பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

டோம்; எந்த நிலத்தினின்றும் தாங்கள் அகற்றி அழிக்கப் பெற்றனவோ, அந்த நிலத்திலேயே மீண்டும் மலர்ந்து மணம் நாறும் இந்நெய்தல் மலர்களின் மானங்கெட்ட செயலை என்

னென்பது என எண்ணி, அம்மலர்களே எள்ளியவாறே வீடு வந்து சேர்ந்தோம்.

11அன்ப! நெய் தவின் செயல்கண்டு பிறந்த நகைப் புணர்ச்சி எங்கள் நினைவை விட்டு இன்னமும் நீங்கவில்லை. அந்நிலையில் நீ வந்து நிற்கின்றாய்; உன்னை ஏற்றுக்கொள்ளத் துடிக்கிறது எங்கள் பெண் உள்ளம். அழகாலும் அறிவாலும் ஊரார் போற்ற வாழ்ந்தவளின் அழகும் அறிவும் பாழாகு மாறு அவளே வெறுத்து ஒதுக்கிவிட்டுத் திரிந்தாய் நீ; வெறுத்துவிட்டுப் பலநாள் மறந்திருந்த நீ மீண்டும் வந்த வுடனே, உன்னே வரவேற்கத் துடிக்கிறது எங்கள் பெண் உள் ளம்; அவ்வாறு வாழவேண்டிய நிலையில் பெண்களை வைத்து விட்டது இவ்வுலகியல். நெய்தலின் செயல் கண்டு நகைத் தோமே நாங்கள். இப்போது இம்மங்கையர் குலத்தின் மானம் கெட்ட செயல் கன்டு என் செய்ய வல்லேம்; அந் நெய்தலைவிட நாங்கள் எந்த அளவில் உயர்ந்துவிட்டோம், கொடுமை செய்துவிட்டார்கள் என அறியும் அறிவு அந்நெய் தலுக்கு இல்லை. அதனல், மீண்டும் மலர்ந்த அதன் செயல் கண்டு நகைப்பது பொருந்தாது; அஃது ஒருவாறு அமைதியும் உடைத்து. ஆனல் எங்கள் நிலை அத்தகையதல்லவே, பிழை புரிந்து விட்டாய் நீ என்பதை அறிகிருேம்; அதற்காக வருந் துகிருேம்; இருந்தும் உன்னை ஏற்றுக்கொள்ளத் துடிக்கிறதே இப்பெண்ணுள்ளம்; இதை என்னென்பேம்’ எனப் பெண் சளின் பற்றுக்கோடற்ற வாழ்க்கையின் அவல நிலையை எடுத்துக் காட்டி, அத்தகையாரை வருந்தவிடுவது அவர்களே வாழ்விக்க வந்த ஆடவர்க்கு அறிவுடைமையாகாது என் பதை அறிவுறுத்தினள்.

  • கைவினை மாக்கள் தம் செய்வினை முடிமார்

அரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட டிேன வரம்பின் வாடிய விடினும்