பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9;

கொடியரே நிலம் பெயர்ந்து உறைவேம் என்னது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் கின் ஊர் நெய்தல் அனையேம்; பெரும! நீ எமக்கு இன்னதன பல செய்யினும் பின்னின்று அமைதல் வல்லா மாறே. a

அன்பு அன்று இருந்தது; இன்று இல்லை

இளைஞனுக்கு இசைவு தந்த தோழி, அவனே வாயிற்புறத் திலேயே இருக்குமாறு பணித்துவிட்டு உள்ளே சென்றாள். தன்பால் கொண்ட அன்பை மறந்து தகாலொழுக்கம் மேற் கொண்டு திரியும் கணவன் கொடுமையை நினைத்து கண்ணிர் சொருகிக் கலங்கிக் கிடப்பவள் அருகிற்சென்று அமர்ந்தாள். இாேஞன் வந்து வாயில் வேண்டி நிற்பதையும், அவன் வேண்டுகோளைத் தான் ஏற்றுக்கொள்ள தேர்ந்ததையும் எடுத்துக் கூறி, பெண்ணே இளைஞன் பிழை புரிந்து, சில நாள் பிரிந்திருந்தாளுயினும், அவன் உன்பால் கொண்டுள்ள அன்பு சிறிதும் குறைந்திலது; மேலும் அவன் பால் நீயும் பேரன்பு கொண்டுள்ளன; ஆகவே அவனே ஏற்றுக்கொள் வதே அறிவுடைமையாகும்’ என நயமாகக் கூறினுள்.

கணவன் என்பால் கொண்டுள்ள அன்பு குறைந்திலது என்ற தோழியின் சொற்கள் அப்பெண்ணின் சிந்தனையைக் கிளறிவிட்டது. அவன் தன்னை முதல் முதலாகக் கண்டு காதல் கொண்ட காலத்தில், அவன் தன் பால் கொண்டிருந்த

a குறுந்தொகை : 309. உறையூர்ச் சல்லியன்குமாரன்

கைவினே மாக்கள்-தொழில் புரியும் உழவர்; முடிமார்முடித்தற் பொருட்டு; நீடின-நீண்ட, பெயர்ந்து-நீங்கி; பெயர்த்தும்-மீண்டும்; கடிந்த களைந்து நீக்கப்பெற்ற, செறுவில்-வயலில்; வல்லாமாறு;-வன்மை இல்லாமையால்; வல்லாமாறு நெய்தல் அனையேம் என மாற்றுக,