பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

அன்பின் பெருமை அவள் நினைவிற்கு வந்தது. அன்று, அவள், தந்தை நாட்டில் வாழ்ந்திருந்தாள். அந்த ஊருக்கும், இன்று வாழும் இளைஞன் ஊருக்கும் இடையே எவ்வளவோ தொலைவு; பல மலைகளையும், பல காடுகளையும் இடையிலே கொண்டு நனி மிக நீண்டிருந்தது அவ்வழி; வழி நீண்டுளதே என்:தை நினேத்துப் பாராமல், மலைகளைக் கடந்தும், காடுகளின் ஊடே நுழைந்தும், காட்டாறுகளை நீந்தியும் செல்ல வேண்டுமே என எண்ணிக் கலங்காமல் இடைவழியில் உண்டாம் இடையூறு கண்டு அஞ்சாமல், இர வென்றும் பகலென்றும் பாராமல் வந்து, தன்னைக் கண்ட அவன் அன்பின் பெருமை அவள் நினேவிற்கு வந்தது. அன்று அத்தனை இடையூறுகள் இருக்கவும், அவற்றையெல்லாம் மதியாது வந்து எப்பொழுதும் தன்னேயே சுற்றிச்சுற்றி வளைய வந்து கொண்டிருந்தவன் இன்று தன்னை அறவே மறந்து திரிவதை, அன்று அவன் காட்டிய அன்பு இன்று இல்லாமையை எண்ணி நெடு மூச்செறிந்தாள், அவள் கண் கள் ஆருகப் பெருகின. அன்று அவன் காட்டிய பேரன்பை யும், இன்று அவன்பால் காணலாம் அன்பின்மையையும் அறிந்த தோழி, “அவன் அன்பு குறைந்திலது, அவன்பால் நீயும் அன்புடையை, ஆகவே அவனே ஏற்றுக்கொள்’ எனக் கூறுகின்றனளே; என்னே இவள் பேதைமை என எண் னிற்று அவள் நெஞ்சு.

வாயில் வேண்டி நிற்கும் தோழியின் முகத்தை நோக்கி ஞள் ; தோழி! அவர்டால் நான் அன்பு கொண்டிருந்தது உண்மை; அது பண்டு; இன்று அது அழிந்துவிட்டது. தோழி! இன்று நாங்கள் இருவரும் ஒரு மனேயில் வாழ்கிருேம். எங்கள் இருவர்க்கும் இடையே இருந்து, ஒருவரையொருவர் காணவொட்டாது தடுப்பவர் எவரும் இல்லை; அவரும் நானும் ஒர் ஊரிலே வாழ்கிருேம், களவுக் காலம்போல் மலைகள் இடையிட்டுக் கிடக்கும் தொ ைநாடுகளுக்குப் போய்விடவில்லை; காடுகள் இடையிட்டுக் கிடப்பதால் ஒன்று ஒன்றிற்குப் புலனாகாத வெளியூரில் சென்று