பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ யாகியர் என் கணவன :

தோழி! அவரிபால் பேரன்பு கொண்டிருந்தேன்; அது ஒரு காலத்தில். இன்று அது இல்லை’ என அப்பெண் கூறியது கணவன்பால் அன்பின்மையால் அன்று, அவன் தன் கன மறந்து திரிகின்றனனே என்ற வெறுப்புணர்ச்சியால் என்பதை அறிந்தவள் அத் தோழியாதலின், கணவன் வந்து வாயிற்கண் நிற்கின்றான்; அவன் குற்றம் கடிந்து ஏற்றுக்கொள்வது உன் கடன்’ என்றதன் அறிவுரையை ஏற்க மறுத்தவள். அவனே நேரில் செல்வனுயின் ஏற்றுக் கொள்வள் எனத் துணிந்தாள். அதஞல் அவளை விடுத்து. இளைஞன்பால் சென்று அன்ப! நின் மனைவி என் வேண்டு கோளை மறுத்துவிட்டாள்; என்றாலும், உன்னே நேரிற் காணின் அவள் சிந்தை குளிர்ந்துவிடும்; ஆகவே நீயே சென்று காண்க” எனக்கூறி இளைஞன, அப்பெண்ணின் பால் அனுப்பினுள். அவனும் அவ்வாறே சென்று, அவள்முன் நின் முன்.

வந்து நிற்பானேக் கண்டாள் அப்பெண்; அவ்வளவே. அவன்பால் அவள் கொண்டிருந்த கோபம் அவ்வளவும் அறவே மறைந்துவிட்டது. அவன் செய்த குற்றம் கொடுமை அவ்வளவையும் மறந்துவிட்டாள். அவன் செய்த கொடுமை களுள் எதுவும், அவள் மனத்திரையில் எழவில்லை. தன்னை மறந்து திரிந்தது. பரத்தையர் உறவு கொண்டு வாழ்ந்தது, அதனுல் இரவு பகலாகத் தான் துயர் உற்றுக் கிடந்தது இவற்றுள் எதையும் அவள் எண்ணிப் பார்த்திலன். மாருக, அவன் பெருமை, பேரழகு, அவன் தன்பால் கொண்டுள்ள பேரன்பு, அப்பேரன் புத் தொடர்பால் தோன்றும் பேரின்பம் ஆகிய இவையே அவள் அகத்தில் நிறைந்து வழிந்தன. ஆத ஞல், வந்தால் தன் வான் துயர் காட்டி வாய் வலிக்குமளவும் வசைபாடி விரட்டத் துணிந்து அவன் வருகையை எதிர் நோக்கியிருந்தவள், வாயடைத்துப் போளுள், அவன் உருவம் அவள் கண்ணிற் பட்டவுடனே அவள் அகம் மலர்ந்து விட்டது; அவ்வகமலர்ச்சி முகத்தின் வழிக் காட்சி அளிக்க எதிர்சென்று வணங்கி வரவேற்றாள்,