பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல் எமுைன் என்ற தொடர்களால் புலவர்கள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள். அதையெல்லாம் அறிந்திருந்தும், இன்ப நுகர்விற்குரிய வாய்ப்பு எதுவும் இல்லாத ஓர் ஏழை, பேரின்பப் பெருவாழ்வைப் பெற விழைதல் கூடுமோ? அவ் அன்ப வாழ்வை எண்ணி எண்ணிப் பெருமூச்செறிவது தவிர்த்து அவனால் வேறு என்ன செய்ய இயலும்? அவன் அறிவுடையயிைன் அடைதற்கு அரிது இன்பம் என்பதை உணர்ந்து, தன் ஆசையை அடக்கிக்கொள்வான். இல்லை யேல், ஆசைக்கு அடிமையாகி அல்லல் பல அடைந்து இறுதி பில் அழிவது தவிர ஆவது ஒன்றும் இராது.

இன்ப உலகிற்கு இட்டுச் செல்லும் பாதையின் இப்பண் அa"உணர்ந்திருந்த இளைஞன், தன்னிலையும் இப்போது அன்னதே என்பதை அறிந்து வருந்தின்ை. காதலி எல்லா வகையாலும் நல்லள்; இணையிலா அழகுடையாள்; இனிய இளமை நலம் உடையாள்; ஈடில்லாச் செல்வ வாழ்வுடை யாள் ஆழ்ந்த அறிவுடையாள்: ஆளுல் தன்னல் அடைய லாகா அத்துணைப் பெருநிலையினள். எல்லாம் இருந்தும் என்ன? அவளை அடையத்தக்க வாய்ப்பு எதுவும் தன்பால் இல்லை; ஒர் ஊரினள் என ஊரால் உரிமை கொண்டாடு வதோ, ஓர் இனத்தாள் என இன ஒற்றுமை காட்டுவதோ, பல நாள் பழகியவள் எனப் பழந்தொடர்பை நினேவூட்டு வசதி எதுவும் தன்னல் இயலாது. இவற்றையெல்லாம் உணர்ந்தும் அவளை அடையத் துடிக்கும் தன் உள்ளத்தின் நிலை குறித்து நாணினன். இன்பம் நல்லது என அறிந்தவன், அது அடைதற்கு அரிது என்பதையும் அறிந்து, ஆசையை ஆட்க்கிக்கொள்ளக் கருதவேண்டும். அதுதான் தக்கதாகும். அவ்வாறின்றி, காதவி நல்லள் கட்டழகி கவின் மிரு பண்பு டையாள்” எனப் பலப்பல கூறிப் பிதற்றும் என் பேதை நெஞ்சம், அவள் அடைவதற்கு அரியள் என்பதை அறிந்து, அவ்வாசையை அடக்கிக்கொள்ளாது, அவள் பின் அலகின் றதே, என்னே இந்நெஞ்சின் மடமை என்று எண்ணி வருந் நிஞன். வருந்தியவன் வாளா இருந்துவிடாது, அவ்வாசை