பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 8

அவும் துணிந்துவிட்டது என் உள்ளம். இப்பிறவியில் பெற முடியாத ஒன்றை, அது வரும் பிறவியிலாயினும் பெற் றுப் பேரின்பம் பெற விரும்புகிறது; அது வாய்க்க நீ அருள் புரிவாயாக; இப்பிறவியில் பிழை புரிந்ததுபோல், வரும் பிறவியிலும் புரிந்துவிடாது அப்பிறவியிலாவது நீ, என் ஒருத்திக்கே கணவகை வந்து வாய்ப்பாயா, அலிபா கணலஞ வந்து வாய்ப்பது மட்டும் போதாது; கருத் தொருமித்த கணவனுகவும் வேண்டும்; உன் உள்ளத்தில் இடம் பெறுவாள்-உன் நெஞ்சைத் தனக்கே உரித்தாகப் பெறுவாள்-நான் ஒருத்தியே ஆதல் வேண்டு ; அத்தகைய பெரும்பேறு எனக்கு வாய்க்குமாறு நீ பேரருள் புரிதல் வேண்டும்’ என வேண்டிக்கொள்ளும் முகத்தான் அவன் செய்த பெரும் பிழையையும், கணவன் தவறிஞன் என அறிந்தும் அவன் அன்பைப் பெறத் துடிக்கும் தன் உள்ளத் தின் பேரொழுக்க நிலையையும் தெளிவாக உணர்த்தி அவனேத் தெருட்டினள்.

தவறு செய்த தன் மகனைக் கடுஞ்சொல் வழங்கிக் கண் டித்து நல்லோன் ஆக்குவதைத் தன் தலையாய கடமை யாகக் கொண்ட தாய்போல், கணவன் தவற்றினே, அவன் உள்ளம் உணர்ந்து திருந்துமாறு அன்பு கலந்த வன்சொல்

  • அணில் பல் லன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் அன்ன மாtர்ச் சேர்ப்ப! இம்மை மாறி மறுமை ஆயினும் நீ ஆகியர் என் கணவன; யான் ஆகியர் கின் நெஞ்சு நேர்பவளே.’ ,

a குறுந்தொகை 49. அம்மூவர்ை. கொங்கு-மகரந்தம்; முன்டகம்-முள்ளிச்செடி, மணிநீலமணி, கேழ்-நிறம் மாநீர் - கடல்; சேர்ப்ப - கடற் கரைத் தவை. ஆகியர் - ஆகுச; நேர்பவள் - ஒத்தவள்; நீ என் கணவனே ஆகுக! நெஞ்சு நேர்பவள் யானே ஆகுக என ஏகாரத்தை ஈரிடத்தும் கொண்டு கூட்குக.