பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

அறியாதவள். காதல் நோயின் கொடுமையைக் காளுத வள்’ என்றெல்லாம் பழித்தாளே. அப்போது அத்துணை வெறுப்புள்ளம் கொண்டு விளங்கியவள். வந்த கணவன் முன் நின்று அவன் கொடுமையை எடுத்துக்கூற ஒரு முறையாவது வாய் திறக்க வேண்டுமே; அதுதானே இல்லை. ஆகட்டும் காலையில், அவள் இருவகை ஒழுக்கத்தையும் எடுத்துக் கூறி எள்ளி நகையாடுவேன்’ என்ற எண்ணங்கள் எழ இறங்கிச் சென்றாள்.

பொழுது புலர்ந்தது; கணவன் மீண்டு வந்து விட்டான் என்ற இன்ப நினைவுகளால் எழுந்த அகமலர்ச்சியால் பெற்ற முகப்பொலிவோடு மனப்புறத்தே வந்து நின்ற அப்பெண் ணேத்தோழி அணுகினள், பெண்ணே பரத்தையர் உறவால் ஒழுக்கங் கெட்டுத் திரிந்தவன் உன் கணவன்; அந்நினே வால் நீ உடலும் உள்ளமும் நனி மிகத் தளர்ந்துவிட்டாய் என அறிந்தும், வந்து அன்பு காட்ட நினையாது அப்பரத்தையர், இன்பத்திலேயே அறிவு மயங்கி வீழ்ந்து கி ட ந் த. வ ன் உன் கணவன்; அத்தகைய கொடியவனை இவன், இன்று வந்தால், வந்தவனே வாயிற் புறத்திலேயே நிற்க வைத்து, வழுக்கி வீழ்ந்த அவன் ஒழிக்க கேட்டை ஊரார் அறியப் பண்ணி அவனை அலைக்கழிக்க வேண்டாவோ அவனை வாயிற் புறத்தில் கண்டாயோ இல்லையோ, இன்முகம் காட்டி அவனே வரவேற்று வழிபா டாற்ற முற்பட்டுவிட்டனேயே, அவன் கொடுமை குறித்த வார்த்தை ஒன்றுகூட வெளிப்பட்டிலதே, என்னே உன் பேதைமை!” எனக் கூறி எள்ளி நகையாடினுள்:

எள்ளிக் கூறிய தோழியின் சொற்களைக் கேட்டாள் அப்பெண்; ஆனல் அதுகுறித்து அவள் சிறிதும் கவலை கொண்டிலள். கணவன் தகாதவொழுக்கம் கண்டு தன் னினும் மிகுதியாகக் கலங்கியவள் இத் தோழி; அவன் அவ் வொழுக்கக்கேட்டினின்றும் மீளத் தன்னல் ஆன அனைத்தை யும் செய்து தோற்றுச் சோர்ந்தவள் இவள்; அதனால்தான் உற்றதுயரைத் தன்ைேடு ஒருங்கிருந்து அடைந்தவள்; தன்