பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

θ

அடைதற்கு அரிது; ஆகாது; அடாது என்பதை அந்நெஞ் சிற்கு உணர்த்தவும் விரும்பின்ை. உணர்த்தவும் செய்தான்.

“இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு

அரிது வேட்டனையால், கெஞ்சே! காதலி கல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அரியள் ஆகுதல் அறியாதோயே."a

அவள் அழகு என்னை அழித்துவிட்டது :

பெண்ணின் காதட்ை பெற முடியவில்ேைய என்ற கவலை பெரிதாயிற்று இளைஞனுக்கு. அதனல் அவன் நலம் கெட்டது; உடல் தளர்ந்தது; தோள்கள் மெலிந்தன; ஆண் மையும் ஆற்றலும் அவனைவிட்டு அகன்றன; பித்துப் பிடித்த வன் போலவும், பேயறைந்தவன் போலவும் தோன்றின்ை. அவனே அந்நிலையில் கண்டான் அவன் ஆருயிர் நண்பன்: தொலைவில் வரும் அவனைக் காணும்பொழுதெல்லாம், கரிய பெரிய காட்டு யானை பெருமித நடை நடந்து வருகிறதோ என எண்ணி மகிழ்ந்தவன் அந்நண்பன்; அத்துணைப் பருத்த உடலும், அவ்வுடலமைப்பிற்கேற்ற ஆண்மையும் உடைய வன் அவ்விளைஞன், அவனை வென்று அடக்குவாரை, அந் நண்பன், அன்றுவரை கண்டிலன்; அம்மட்டோ அவன் உடலேப் போன்றே அவன் உள்ளமும் உறுதி வாய்ந்தது; அவ்வுறுதியை உலகில் உள்ள எந்த உணர்வாலும் அழிக்க இயலாது; அவன் அறிவு ஆசைக்கு அடிமையாகாதது; ஒரு பொருளின் பால் ஆசை கொண்டு, அதற்கு அடிமையாகி அழிந்துவிடும் அவ்வளவு ஆற்றலிழந்ததன்று அவன் அறிவு. மாருக, ஆசை தவருண நெறியில் செல்லுமாயின், அதை

a குறுந்தொகை 1 120. பரணர். இல்லோன் - வறியவன்; காமுற்றா அங்கு விரும்பியது போல். அரிது - அடைதற்கு அரிய ஒன்றை வேட்டன. விரும்பிய்ை. அறிந்தாங்கு - அறிந்ததுபோல்.