பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

அடிக்கி ஆளவல்ல ஆற்றல் வாய்ந்தது அவன் அறிவு” என எண்ணி இறுமாந்திருந்த அந் நண்பன், இளைஞன் உடல் தளர, உள்ளம் சோர்ந்து வந்து நிற்கும் நிலைகண்டு கலங் கினன். அவனை அணுகி, அன்பl தளரா உன் உடலும், நி ைபிறழா நின் உள்ளமும் இவ்வாறு தளர்ந்து நிலை பெயரக் காரணம் யாது? அவற்றை இவ்வாறு வருத்தும் உன் நோய் யாது? அந்நோய் வந்தது எவ்வாறு? நீ கலங்கி அழியக் காரணமானவர் யாவர்?’ எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கலங்கிஞன்.

அது கேட்ட இளைஞன், நண்ப! கட்டுக்கடங்காது திரிந்து, கண்ணில் படும் மாக்களையும், மரங்களையும், மலைப் பாறைகளையும் உருட்டி அழித்து ஒடும் காட்டு யானையை, ஒரு சிறு பாம்புக்குட்டி அழித்து விடுவதும் உண்டு; அதைப் போல், எதற்கும் அஞ்சாத என்ன, இவ்வாறு நோய் செய்து விட்டாள் ஒரு பெண்; அப்பெண் நனி மிக இளையவள்:நாணல் முனேபோல் முளைத்திருக்கும் வென்பற்களை வரிசையாகப் பெற்றிருக்கும் அவள் வாய்; வளையல் ஒலிக்கும் அவள் கைகளில்;அவள் வாயின் சிறு முறுவக்ை கண்டேன்; கைவளை யின் ஒலியினைக் கேட்டேன்; அவ்வளவே யான் இவ்வாறு நிலை குலைந்து விட்டேன்.” -

“சிறு வெள் அரவின் அவ்வரிக் குருளே,

கான யானை அணங்கி யாஅங்கு, இளையள், முளைவாள் எயிற்றள், வளையுடைக் கையள் எம் அணங்கி யோளே.”

“நன்ப! அதோ தெரிகிறதே ஒரு ம,ை அதுதான் அவள்

குறுந்தொகை 119. சத்தி நாதனர்.

அவ்வரி - அழகிய கோடுகளை உடைய குருளை குட்டி: கானயான - காட்டுயான அணங்கி யாஅங்கு-வருந்தினற் போல்; முளை. நாணல் முளைபோன்ற, வாள் - ஒளயுடைய, எயிற்றள் - பற்களை உடையவள், .