பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ij

அவள் வாழிடம்; அம்மலையினின்றும் வீழ்கிறதே துtய வெள்ளிய அருவி தெரிகிறதா நினக்கு அவ்வருவி, கீழே உள்ள பாறைகள்மீது வீழ்வதால் எழும் ஒலியும், அதோ கேட்கிறதே; அந்த மச்ேசாரலில், அவ்வருவியின் கரையில் உளது ஒரு குறவர் பாடி, அப்பாடியில் வாழும் குறவர்களுக் குத் தலைவன் ஒருவன் உளன்; அவன் மகளே என்னை இவ்வாறு ஆக்கியவள் நல்ல அழகி அவள்; அவள் சாயல், தண்ணெனக் குளிர்ந்த நீர்போல், கான்பதற்குப் பேரின்பம் தரும்; அவளைக் கண்டேன் ஒரு நாள்: கண்ட அப்பொழுதே, அவள் சாயல் என்னே அழித்துவிட்டது; நெருங்கிய எப்பொருளையும் எதிரித்துப் பாழாக்கும் பெரு நெருப்புப் போன்ற என் உள்ள உரத்தை அவள் சாயல் அழித்துவிட்டது; ஆசைகள் அணுக அஞ்சும் என் உள்ளத்தை அவள் அழகு அடிக்கி அடிமை யாக்கிக் கொண்டது; அவளேக் கண்டேன்; காதல் கொன் டேன்; அதுவே என் நோய்க்கு வித்தாய் அமைந்துவிட்டது; அன்றே என் நிலை குன்றிற்று’ -

‘மால்வரை இழிதரும் தூவெள்ளருவி

கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் சிறுகுடிக் குறவன் பெருந்தோள் குறுமகள் நீர் ஒரன்ன சாயல் - தீ ஒரன்ன என் உரன் அவித்தன்றே"டி

“நன்ப! மறுநாள் அங்குச் சென்றேன்; மச்ை சாரலில், பருத்தி கலந்து விதைத்த தினைப் புனத்தில் குருவிகளே ஒட்டிக் காவல் புரிந்துகொண்டிருந்தாள் அப்பென்; அவளை அங்குக் கண்டேன்; கவண் வீசும் அவள் தோளழகைக் கண்டேன்;

குறுந்தொகை 1 95. கபிலர். மால்வரை - பெரியம;ை இழிதரும் - வீழும்; கல்முகை . பாறைகளின் வெடிப்புக்களில்; ததும்பும்- வீழ்ந்து ஒலிக்கும்; சிறுகுடி.சிற்றுார்; குறுமகள்.சிறு பெண்; நீரோரன்ன . நீரை ஒத்த உரன்- உள்ள உறுதி அவித்தன்று அழித்தது.