பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f :

குருவி ஒட்டும் அவள் குரலின் இனிமையைக் கேட்டேன்: செயலிழந்தேன்; சிறிது அணுகச் சென்றேன்; அவள் பார்வை என்மீது பட்டது; அம்மம்ம! அக்கண்ணின் அழகைத்தான் என்னெனச் சொல்வேன்! கருநீல மலரை வென்றது அக்கண்: மான்விழி போலும் மருட்சி நிறைந்தது; அப்பார்வையில் இனிமையும் குளிர்ச்சியும் இருக்கக் கண்டேன்; ஆனால், அதன் தோற்றத்தில் இருந்த இனிமை, அதன் தொழிலில் இல்:ை வளைந்த வில்லினின்றும் விரைந்து பாயும் அம்புபோல், அஃது என் உள்ளத்தில் ஆழப் பாய்ந்து ஆருத்துயர் செய்தது. அன்று, அவள் அம்புக் கண்விளைத்த அந்நோய், இன்று ஊரெல்லாம் உணருமாறு, என் உடல் நலனையே அழித்து விட்டது; நான் என் செய்வேன்!” என்று கூறி வருந்திஞன்.

‘பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து

எல்லாரும் அறிய நோய் செய்தனவே - தேமொழி, திரண்ட மென் தோள், மாமலைப் பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண்ணே. a

காதல் ஒரு கற்பனை :

இளைஞன், ஒரு பெண்ணின்பால் கொண்ட காதலால் கவின் இழந்து, கருத்திழத்து வாடுகிறேன்’ எனக் கூறக் கேட்டான் நண்பன். நண்பனின் தவறிய நிலைகண்டு நகுதல் ‘நட்பாகாது; தவறு காணின், அதை எடுத்துக் காட்டித்

. குறுந்தொகை ! ?. , -

ஆலமரும். சுழலும், தகைய - அழகுடைய ஏ - அம்பு, தேமொழி. இனியமொழி, பரீஇ. பருத்தி; ஏனல் . தினே: குரீஇ - குருவி; ஒப்புவாள் - ஒட்டுவாள்,