பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மூதா தைவந்தாங்கு விருந்தே காமம், பெருந்தோளோயே!” .

காதல் பொறுத்தற்கு அரியது:

“என் தவறு கண்டு இடித்துக் கூறித் திருத்த முன் வந்த நன் பரே! உன் நல்லெண்ணத்திற்கு நன்றி, நண்பன் நல்லுள்ளம் கண்டு மகிழ்கிறது என் உள்ளம்; ஆனுல், நண்ப! இடித்துக் கூறித் திருத்த முயலும் உன்னல், என்கனப் பற்றிவருத்தும் இக்காதல் நோயைப் பெருகவிடாமல் தடுத்து நிறுத்தஇயலு மேல் நன்று; பெருகித் துயர் செய்யும் அதைத் தடுத்து நிறுத்துவது என்னல் இயலாது; நண்பர் கோடை ஞாயிறு, தன் முழுக் கதிர்களையும் விட்டுக் காய்கிருன்; அஞ்ஞாயிற் றின் ஒளியால் வெம்மையுற்று வெடித்துக் கிடக்கிறது. ஒரு கற்பாறை; அக்கறபாறைமீது வெண்ணெயைக் காய வைத்து, அதைக் காக்குமாறு ஒருவன நிறுத்தியுள்ளார்கள் அவ் வெண்ணெய்க்கு உரியார். ஆனல் காக்கக் கடமை மேற்கொண்டவனே, இருகைகளையும் இழந்த ஒரு முடவன்; வாய் திறந்து பேச முடியாத ஊமை, அதனல், வெண் ணெய்க்குக் கேடு வந்தால், கையால் எடுத்துக் காப்பதோ: பிறரைக் கூவி அழைத்து அறிவிப்பதோ அவல்ை இயலாது: வெய்யிவில் வைக்கப்பட்டுள்ள வெண்ணெயை அத்தகை யான் காத்துக் கிடக்கிருன்; வெய்யில் வெப்பத்தால் வெண் ணெய் உருகிக் கீழே ஒழுகி ஓடத் தொடங்கிவிட்டது. அது பரவிப் பாழாவதை அவனும் பார்த்துவிட்டான். பார்த்து என்ன பயன்; அது பரவிப் பாழாவதைக் கைகளால் தடுக்

a குறுந்தொகை 104. மிளைப் பெரும் கந்தன்

அண்ங்கு-வருத்தம்; நினைப்பின்.ஆராய்ந்து நோக்கி ல்ை; முதைச் சுவல்-பழைய கொல் ைமேடு, கலித் த. முளைத்த மூதா-(முதுமை+ஆ)கிழப்பசு, தைவந்தாங்குநாவால் தடவி இன்புற்றாற்போல்; விருந்து-புதுமையாகத் தோன்றி நிற்கும் ஒரு நிலையிலர் இன்பம்,