பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கவோ, பிறர்க்கு அறிவிக்கவோ முடியாது. பார்த்துப் பார்த்துக் கண்ணிர் விட்டுக் கலங்கி நிற்கிருன்: நண்பl ஆக் கையில்லா ஊமை காக்கும் வெண்ணெய் போன்றது என் காதல் நோய்; வெண்ணெய் உருகிப், பரவி ஒடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதல்லது, வேறு எதுவும் செய்ய இய லாத அவ்வூமை முடவன் போல், காதல் நோய் பெருகி வருத்துவதைப் பார்த்துப் பார்த்து வருந்திக் கிடப்பதல்லது, அதைத் தடுத்து நிறுத்துவதோ, உன் போலும் நண்பர் களுக்கு உணர்த்தி வழி கான்பதோ என்னல் இயலவில்;ை நான் யாது செய்வேன்!” என உள்ளம் உருக உரைத்து வருந்தினன்;

இடிக்கும் கேளிர் நுங்குறையாக கிறுக்கல் ஆற்றிளுே கன்று மன்தில்ல; ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில், கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே’.

இவளே தோழி:

காதல் நோயால் வருந்திஞன் இளைஞன், அவன் நண்பன், காதல் நோயால் கருத்திழந்து போதல் கூடாது என அறி வரை கூறினனே யல்லது, அந்நோய் தணியத் துணை புரிந் திலன், அதனல், அந்நோய் திரிக்கும் வகையறியாது வரும்

குறுந்தொகை 58. வெள்ளி வீதியார். இடிக்கும்-குற்றம் கண்டு கடிந்து உரைக்கும்; குறை யாக செயலாக; நிறுக்கல் ஆற்றின்-தடுத்தச்ை செய்தால்; நன்று மன்தில்ல.மிக நல்லது; அதை நானும் விரும்புகிறேன்: வெவ்வறை-வெப்பம் மிக்க கற்பாறை, மருங்கில் இடித்தில்; கண்ணில் - கண்களால்; உணங்கல் - உலர்த்தவைக்கும் பொருள்; நோன்று கொளற்கு - பொறுத்துக் கொள்வதற்கு.