பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

அரசன் தனிமிக நல்லவன் என்ப; அவன் அமைத்துள்ள அறங்கூறு அவையில் இருந்து அறம் வழங்கும் ஆன்றாேரும், நடுவு நிலைமை பிறழா நல்லோர் என்ப; அவ்வவைக்குச் சென்று, எனக்கும் என் காதலிக்கும் உண்டான உறவுகளை எடுத்துக் கூறி முறை வேண்டி நின்றால், இவள் நிைைம என்னும்; அந்நிலையில், இவள் நி ைபெரிதும் இரங்கற்குரிய தாகிவிடுமே! இதை அறிந்து கொள்ள மாட்டாத இவள், உறுதியாக அறிவற்றவளேயாவள்’ என்று கூறிக்கொண்டிே. நடந்தான்.

“பணத்தோள் குறுமகள் பாவை தைஇயும்,

பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும் மற்றும் இவள், உருத்து எழுவனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில், காப்போர் அறிதலும் அறியார், முறையுடை அரசன் செங்கோல் அவையத்து யான் தன் கடவின் யாங்காவது கொல்? பெரிதும் பேதை மன்ற! - அளிதோ தானே இவ் வழுங்கல் ஊரே ! பழி அஞ்சுகிறது என் நெஞ்சம்:

தோழி அவன் கூறியன கேட்டு அஞ்சிளுள்; அவன் கூறியவாறே மடலேறத் துணிந்துவிடுவனே என எண்ணி நடுங்கிற்று அவள் உள்ளம்; அதை அவள் முகக் குறிப்பால் அறிந்துகொண்டான் அவ்விளைஞன், அதனுல், அவளே மேலும் நடுங்கப் பண்ணுதல் நன்றன்று என நினைந்தான்;. காதலியின் அமிழ்தம் ஊறும் வாய், எக்காலத்தும் கிறந்தனவே வழங்கும் அவள் நாநலம், அந்நாவையும் அஞ்சப் பண்ணி அடக்கும் கூரிய பற்கள்; சில சொற்களால்

1 குறுந்தொகை 275. கோழிக் கொற்றஞர். - பனை - மூங்கில்; பாவை.விளையாட்டுப் பொம்மை; தைஇயும்-பண்ணியும்; பஞ்சாம்ப் பள்ளம்-பஞ்சாய்க் கோரைகள் வளரும் பள்ளம், உருத்து-திரன்டு.தொய்யில்; தொய்யிலை; கடவின்.நிறுத்தி வினவிஞல்; யாங்காவதுஎன்னுவது; பேதை-அறிவின்மை, மன்ற உறுதியாக அழுங் கல் ஊர்-வருத்தம் மிக்க ஊர்.