பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

பல பொருளை விளக்கும் அவள் பேரறிவு முதலாயின. அவன் மனக் கண் முன் தோன்றி மகிழ்ச்சி ஊட்டின; இத்துணை நல முடையாளே, நான் பெறத் துணைபுரிவாள், இவளே யன்றாே” என்ற எண்ணம் எழ, அவள் அச்சத்தை அகற்றத் துணிந்தான். அதனல், அவள் கேளா முன்பே, தானே தனக் குள்ளாகவே, மீண்டும் பேச்செடுத்து, “நான் விரும்பினால், பிறர் எவர் துணையும் இல்லாமலே, என் காதவியை என்னல் அடைதல் இயலும். அதை, இவ்வூரில் வாழ்வார் அனைவரும் அறிவாராக. ஆனல், அவ்வாறு அடைய முன் வந்தால் மடலேறுதல்வேண்டும்; பன மடலால் குதிரை பண்ணி, அதன் கழுத்தில் மணி, மாலைகளைப் பூட்டுதல் வேண்டும்; திருநீறு அணிந்து ஆவிரம், எருக்கு ஆகிய மலர்களால் ஆய மாலையை நான் சூட்டிக்கொள்ளுதல் வேண்டும்; என் உருவமும், அவள் உருவமும் தீட்டிய திரையைக்கையில் ஏந்தி, அம்மடலேறி மன்றம் புகுதல் வேண்டும்; அவ்வாறு மடலேறி மன்றம் சென்றால், நான் கருதிய என் காதலியை அடைதல் உறுதி; ஆனல் ஆங்குக் கூடியிருக்கும் அனே வரும், தன் காதல் ஒழுக்கத்தைக் கண்டோர் அறிய அம்பலமாக்கும் இக்கயவனே, இந்நல்லாளுக்குக் கணவனுக வந்து வாய்க்கத் தகுந்தவன்” எனக் கூறி எள்ளி நகைப்பரே என எண்ணிச், சிறிதே நாணி நடுங்குகிறது என் நெஞ்சம் என்று கூறி, “நாண் மிக்க நல்ல குடியில் வந்தவன் இவன்; என் தோழியின் நலமறியு மளவு, அவளோடு நெருங்கிப் பழகியும் உளன்; ஆகவே, இனியும் மறுத்தல் மாண்பாகாது’ என்ற எண்ணம் அத்தோழியின் உள்ளத் தில் தோன்றுமாறு பண் ணிஞன் (மறைமொழி கிளவி களால் தன் மனக்கருத்தை வெளிப்படுத்தும் அவள் மாண்பு தான் என்னே!)

‘அமிழ்து பொதி செக்கா, அஞ்ச வந்த

வார்ந்திலங்கு வைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்

பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு . . . . . அறிக தில் அம்ம இவ்வூரே மறுகில் -