பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#1

கல்லோள் கணவன் இவன் எனப் பல்லோர் கூற யாம் நிர்ணுகம் சிறிதே.” 2

வந்து வந்து வருந்துகிருன் :

இளைஞன் இனிய இயல்புடிையவன்; தன் தோழியை வாழ்க்கைத் துணையாய் வரைந்துகொள்ளத் தக்க விழுமி யோன் என்பதை அறிந்தாள் தோழி; அதனல், அவ்விருவர் தம் காதல் வாழ்க்கைக்குத் துணைபுரிவதாக அவனுக்கு வாக் களித்தாள்; பின்னர் பெண்ணின்பால் சென்றாள்; அவள், நாண் மிகுதியால், தன் காதல் வாழ்வைத் தோழியும் அறியா வாறு காத்து வந்தாள்; அதனல், அவள் காதலையும் அவள் காதலனையும் அறிந்து வந்த தோழி, அவனே ஏற்றுக்கொள்ளு மாறு வேண்டியபோதும், அவள் ஏதும் அறியாதாள்போல் நடந்துகொண்டாள்; அவள் இயல்பறிந்த தோழியும், அவனைப் புதிதாக அறிமுகம் செய்வாள்போல் பெண்ணே! ஒர் இளைஞன் நம் சேரிக்கு நாள்தோறும் வருகிருன்; தன் வருகையை யாரேனும் உணர்ந்துகொள்வரோ எனும் அச்ச மிகுதியால், எவரும் அறியாவாறு, மெல்ல மெல்ல, மறைந்து மறைந்து வருகிருன்; வந்து, தன் குறைகளைத் திடுமெனக் கூற அஞ்சி, நெடிது நேரம் வாளா இருந்து, பின்னர், மெல்லத் கூறுகிருன; அவன் சொற்கள் காதிற்கு இனிமையா தலோடு, அவன் கூறும் அச்செய்தி கருத்திற்கு இனிமை பயப்பதாகவும் உளது. அவன் அவ்வாறு நாள்தோறும் வந்து, குறை கூறி வருந்தவும், நாம் அவனுக்கு விடையேதும் அளித் திலம்; அதனுல் அவன் உள்ளம் வருந்த, அவன் உடலும் தன் ஒளியிழந்து தளர்ந்தது. அவ்வாறு வருந்துவான் வாட்டத் தைப் போக்க வேண்டும் எனும் உணர்வு, உனக்கோ அல்லது

a குறுந்தொகை : 14. தொல்கபிலர். - அமிழ்து - அமிழ்ந்துபோல் இனிய உமிழ்நீர், பொதி. நிறைந்த வந்த-முளைத்த வார்ந்து-வரிசைப்பட்டு, இலங்குவிளங்குகின்றவை எயிறு - க்ரிய பற்கள்; சின்மொழி - கில சொல் வழங்கும்: தில் - விருப்பத்தைக் குறிக்கும் ஒர் உரிச் சொல்; பெற்றாங்கு-பெற்ற பின்பு மறுகில் - தெருவில்,

கு-3