பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

எனக்கோ உண்டாகவில்;ை அவன் நிலை கண்டு வருந்துகிறது என் உள்ளம், பெண்ணே அவன் இவ்வாறு வந்து வந்து, வறிதே மீண்டு போவது ஒரு நாள் அன்று; இரு நாள் அன்று: பல நாள். பல நாளாக வந்து, தன் குறைகளைப் பணிந்த மொழிகளால் புலப்படுத்தி நிற்கும் நி ைஎன் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டது; அவன் பால் இரக்கங் கொண்டு விட்டேன் நான்; ஆளுல், நான் இரக்கங்காட்டி என்ன பயன்? அவன் துயர் போக்கித் துணை புரியவல்லார் அவன் பால் இரக்கம் கொண்டாரலர், அவர் உள்ளத்தைக் கவரும் ஆற்றல் அவன் சொற்களுக்கு இல்;ை அதனல் அவன் சொற் கள் பயனற்றுப் போயின; எவரும் ஏறமாட்டிாத மலையுச்சி யில் கட்டப்பெற்ற தேனடை, தன்பால் உள்ள தேன் எவரிக் கும் பயன்படாது வீணுகுமாறு, கொன்னே முதிர்ந்து அழிதல் போல், அவனும், தன் வேன்டுகோள் கேட்பாரற்றுக் கெட்டுப் போக, அவன் வறிதே மீன்டு சென்றான்; அவன் நி ைகண்டு இரங்குகிறேன் நான்’ என்று கூறினுள் தோழி. அத்துணை கூறியும், அப்பென் அவள் சொல் கேட்டு, அவன் ஏற்றுக்கொண்டிலள். -

தன் இன்சொல் பயன் தராது போனது கண்டி தோழி, வன்சொல் வழங்கி அவளை வழிப்படுத்தக் கருதினுள்; அதனல், அவளைப் பார்த்து, “பென்னே! நாள்தோறும் வரும் வழக்க முடைய அவன், சின்னம்களாக வந்திலன்; அது எனக்குப் பெரிதும் கவைையத் தருகிறது; நம்மை மறந்து வராதிருக் கும் அம்முடிவை, அவன், தானே மேற்கொண்டிருப்பா னல்லன்; அவன் நம்பால் கொண்டுள்ள அன்பு, அவ்வளவு எளிதில் அழிந்து போகக்கூடியதன்று நான் அறியாமையால் செய்த செயல் ஒன்றே, அவன் வாரமைக்குக் காரணம் போலும்; அவன் அன்பின் ஆழத்தை உணர்ந்து கொள்ளும் அறிவு இல்லாமையால், அவனை வராது விலக்கி விலக்கி, அவனை மனம் நோகுமாறு செய்துவிட்டேன்; அதேைலயே அவன் வந்திலன்; ஆஞல், நான் மறுத்தது ஒன்றையே கொண்டு அவன் நின்று விடுவானல்லனே; அவன் வரும் வழி,