பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கணவன் கொடியன் அல்லன்

தோழியின் துணையால், அவர் காதல் வளர்ந்தது; இளை ஞன், நாள்தோறும் வந்து, தன் காதலியைக் கண்டு மகிழ்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டான்; இந்நிலையில் நாட்கள் சில கழிந்தன. “உன்னைப் பிரியேன்; பிரிந்தால் அறம் அல்லன செய்தவன் ஆவேன்’ எனச் சூளுரைத்துப், பிரிவு நேருமோ என அஞ்சிய அவள் அச்சத்தைப் போக்கிய ?? ஞன், சின்னுட்களாக வந்திலன்; அவன் வாராமையால் அவள் வருந்தினுள்; அவ்வருத்த மிகுதியால் அவள் தோள் தளர்ந்தது; அவள் நெற்றி ஒளி இழந்தது.

ஒரு நாள், ஆடி முன் அமர்ந்து தன்னை நோக்கியவள், தன் உடலில் உண்டான இம்மாறுபாடுகளைக் கண்டாள்; இம்மாறுபாட்டிற்குக் காாணம், காதலன் தன்னே மறந்து வாராதிருக்கும் கொடுமையே என உணர்ந்தாள்; அந்நினைவு உண்டாகவே, அவளை வேருேர் அச்சம் பற்றி அலைக்கத் தலைப்பட்டது; காதலன், தன்னைக் கண்டு, தன்ளுேடு உறவு கொண்ட அன்று, மன்றக் கடவுள் முன்நின்று, பிரியேன் என்று ஆணையிட்டது அவள் நினைவிற்கு வந்தது: அந்நினே வைத் தொடர்ந்து, அன்று அவ்வாறு ஆணையிட்டவன், இன்று பிரிந்து சென்று மறந்து வாழ்கிருன்; அவன் பிரிவால் என்உடல் தளர்ந்துவிட்டது; இவ்வாறு என் உடில் தளருமாறு தன் ஆணையை மறந்த கொடியோன் என்பதை, அன்று அவன் உரைத்த ஆணையைக் கேட்டிருந்த அக்கடவுள் அறியுமாயின், அவளைத் துன்புறுத்தும்; கடவுள், அவன் பிரிவால் வருந்தும் என் தளர்நி ைகண்டே, அவன் கொடியம் என்பதை உணரும்; ஆதலின் கடவுள் என் காதலனைத் தண்டித்தற்கு நானே காரணமாவேன்; காதலனுக்குக் கேடு சூழ்வாள் காதலி ஆவளோ?” என் இவ்வாறு சென்றது அவள் சிந்தன. உடனே, அவள் உன் உடல் தளர்ந்தது ஏன்?” என எவரும் கேளா முன்பே, நான் அவரிபால் பெருங்காதல் கொண் டேன். அது நிறைவேறவில்:ை அக்குன்றயால் என் துதல் பசந்தது; என் உள்ளம் அவன் அன்பிற்கு உருகிவிட்டது: