பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!&

சந்திப்பிற்கான இடத்தை நாள்தோறும் மாற்றிக்கொண்டே வந்தாள். இன்று வரும் இளைஞனிடம், நாளைக்குச் சந்தித் கும் இடம் இது என்பதைக் குறிப்பால் அறிவித்துவிடுவாள் அவ்வாறு அவள் இடம் குறிக்கும் வகை, அறிந்து மகிழ்தற்கு உரியதாம். .

ஒருநாள், இளைஞன் வழக்கம் போல் வந்து, சிறிது மகிழ்ந்திருந்து, பின்னர் ஊர் திரும்பினன்; அந்நிலையில், அவனே இடைமறித்து, அன்பே எம் ஊர்க்கு அண்மையில் ஒரு பொய்கை உளது; அப்பொய்கைக்கு அப்பால், ஒரு சிறிய காட்டாறு ஒடுகிறது; அப்பொய்கைக்கு மிகவும் அண்மை யில் உளது அக்காறுை; அக்காளுற்றங்கரையில் ஒரு சாலை உளது; மரங்கள் நெருங்க வளர்ந்தது அச்சோலை; அதனல், சோக்ைகு இருபாலும் உள்ள காஞற்றிலும் பொய்கையிலும் இரை தேடித் திரியும் நாரைகள் அல்லது வேறு எவரும் அத னுட்புகார்; நாங்கள், ஆங்குள்ள பொய்கைக்கு, எங்கள் கூந் தலுக்கு இட்டுப் பிசைதற்கு வேண்டும் களிமண் கொண்டு. வருவதற்குச் செல்லும் வழக்கம் உடையேம்; அவ்வாறு செல்லும் எங்களைத் தொடர்ந்து உன் காதலியும் வருவள்” என்று கூறினுள்,

ஊர்க்கு அன்மையில் உளது பொய்கை; பொய்கைக்குச் சேய்மைக்கன் எல் ைகாஸ்ரீ என்றமையால், அவர்கள் ஆங்கு வருதல் எளிது என்பதையும், பொழிலுள் தாரை அல்லது பிற எவையும் புகா என்றமையால், ஒருவரும் காணு வாறு, காதலியைக் கண்டு மகிழ்தற்கேற்ற மறைவிடங்கள் ஆங்கு நிறைய உள என்பதையும், கூந்தலுக்கு வேண்டும் களிமன் கொணர் தற்கே மகளிர் ஆங்கு வருவர் என்றமை யால், அவர்களும், அது கிடைக்குப் பொய்கைக் கரையி லேயே நிற்பதல்லது. பொழில் வரையும் வாராராதலின், தம் காதல் ஒழுக்கத்தை அவரும் கண்டுகொள்ளார் என்ப தையும், இளைஞனை உணரப் பண்ணி, மறுநாள் ஆண்டுவந்து நிற்குமாறு செய்த தோழியின் அறிவுடைமை பாராட்டி. தற்கு உரித்து. -