பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைய வேட்டையொன்றில், சுருவால் தாக்குண்டு, அதன் கோடுகள் குத்திப் பண்ணிய பெரும் புண் பெற்றுச் சின்னம் களாக வீட்டோடே வாழ்கின்றான். உப்பங்கழியருகே உப்புப் பாத்திகள் அமைத்து, உப்பு விளைவிப்பதும், விளைந்த உப்பை உள் நாடுகளுக்குக் கொண்டுசென்று விற்று, நெல் வாங்கி வருவதும் ஆகிய தொழில்கள் மேற்கொண்டு, பகற் போதின் பெரும்பகுதி வீட்டிற்கு வாரா இயல்புடைய தாயும், புண்பெற்றுப் படுத்திருப்பவனுக்குப் பணி புரிய வேண்டி. வீட்டிலேயே தங்கி விட்டாள். அதல்ை ஏற்ற இடம் கண்டும், ஏற்புடைய காலத்தைக் காணமாட்டாமல் கலங்கிள்ை. சின்னட்கள் சென்றன. தந்தைக்குப் புண் ஆறிவிட்டது. அவன் கடல்மேற் சென்றுவிட்டாள். தாயும் தன் தொழில்மேற் சென்றுவிட்டாள். வீட்டில் அவள் தனித்து விடப்பட்டாள். மேலும், சில நாட்களாகச் செய்யாதிருந்த தொழிலேயெல்லாம் சேர்த்து முடித்து வரு வதையே, தந்தையும் தாயும் விரும்புவராதவின், அவர்கள் வழக்கம்போல் வாராது, அன்று கிறிது காலம் கழித்தே வருவர். ஆகவே, அவள் எதிர்நோக்கியிருந்த இனிய காலம் வாய்த்துவிட்டது. இந்நிலையில் காதலன் வந்தால், தங்கு தடையில்லாமல் களித்து மகிழலாமே என எண்ணி மகிழ்ந் தது அவள் மனம்; அது பெற, அது துடித்தது; ஆனல் அவனே, நனிமிகச் சேய நகரில் வாழ்பவன். ஆங்குச் சென்று அவனே அழைத்து வருதல் வேண்டும்; அதைத் தன்னுல் செய்ய இயலாது. அதற்குப் பிறர் துணையையே நாட வேண்டும்; என் வேண்டுகோள் ஏற்றுத் துணை புரிய வருவார் மெல்லச் செல்பவராதல் கூடாது; தாயும் தந்தையும் வினை முடித்து வீடு வந்து சேர்வதற்குள், காதலைேடு நெடும் பொழுது இருந்து இன்புறுதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அவனை இவண் விரைந்து கொண்டுவருவாரே செல்லுதல் வேண்டும்; அதற்கு நடந்துசென்றால் இயலாது, குதிரைமீதே செல்லுதல் வேண்டும்; ஆகவே, என் விருப்பம் அறிந்து, விரைந்தோடவல்ல குதிரைமீது அமர்ந்து, இயல்பாகவே விரைந்தோடும் அதை, மேலும் முடுக்கி விரைந்தோட்டிச்