பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அனைவரும் அறிந்துகொள்வரே என அஞ்சிளுள்; அதனல், வழக்கம்போல் வந்த இளைஞனே ஒருநாள் கண்டு அன்ப! இனி சங்குப் பகலில் வராதே, இரவில் எல்லோரும் உறங்கிய பின்னர், எம் வீட்டிற்கு வருக’ எனக் கூறி அனுப்பினள்.

அவனும், அவ்வாறே, அன்று முதல் இரவில் வரத் தொடங்கினன்; ஆல்ை அது அவ்வளவு எளிய செயலாகத் தோன்றவில்லை; இரவுச் சந்திப்பிற்கு எத்தனையோ இடிை யூறுகள் உண்டாயின; ஒருநாள், ஊரில் காவல் கடுமையாக இருந்தது; அதனல் ஊருள் நுழைய முடியாமலே திரும்பிவிட் டான்; மற்றாெரு நாள், அவன் அவ்வூருக்குப் புதியவன் ஆதலின், அவ்வூர் நாய்கள் அவனைக் கண்டதும் குரைத்துத் துரத்தத் தொடங்கின; அதனல், தன் வருகையை ஊரார் அறிந்துகொள்வர் என அஞ்சி அகன்றுவிட்டான்; ஒருநாள், காவலர் காவயுைம் கடந்து, ஊர் நாய்கள் உணர்தலினின் றும் தப்பி விடுவரை வந்துவிட்டான்; அந்நிலையில் நிலவு வெளிப்பட்டு, பேரொளி பரப்பிக் காயத் தொடங்கிற்று; களவு வாழ்க்கைக்கு நிலவொளி தகுதியுடையதன்று எனக் கருதி ஊர் திரும்பிவிட்டான்; ஒருநாள் இரவு, நல்ல இருட்டு; மேலும் பெரு மழை பெய்துகொண்டிருந்தது; விழித்த கண் விழித்தவாறே வாழும் இயல்பினவாய பேய்களும், தம் கண்ணிமைகளை மூடிமூடித் திறக்குமாறு, கொடிய புயல் கடுமையாக விசிற்று; வெளியுலக நிலையோ அது; அப்பெண் ணின் வீட்டின் அகத்தே, மழையின் கொடுமை கண்டு அஞ்சும் மகளை ஆணைத்துக் கொண்டு படுத்திருந்தாள் தாய்; அவளுக்கு உறக்கம் வரவில்;ை தன் அருகில் படுத்திருக்கும் மகளும், மழைக்கு அஞ்சி, உறங்காது விழித்துக்கொன் டுள்ளோ என்பதை அறிய, அவ்வப்போது, அன்னய்! அன்னய்! என அழைத்துக்கொண்டிருந்தாள்:

அந்நிலையில் அங்கு வந்து சேர்ந்தான் இளைஞன்; மழை யைப் பொருட்படுத்தாது வந்தவதைவின், மழையால் நனந்த யானைபோல் வந்து நிற்கும் அவனைக் கண்டு வருந் திள்ை அப்பெண்; மேலும் வந்தவன் மார்பில் பூசிய சந்தனத்