பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

si

தோழி! என் நெஞ்சு நடுங்குகிறது:

இளைஞன் இரவில் வந்து செல்வதற்கு இடையூறு பல உண்டாதல் ஒருபுறம் இருக்க, அவன் இரவில் வருதலை, அப் பெண்ணும் விரும்பவில்லை! அவன் ஊருக்கும், அவள் ஊருக் கும் இடையில் உள்ள வழி, காடுகளையும், மலைகளையும் கொண்டது; காட்டாறுகள் பல உடையது; அவ்வழியைக் கடந்து வருவார், காட்டுக் கொடு விலங்குகளால் கேடுருது வருதல் இயலாது; காட்டாறுகளைக் கடத்தலும் எளிதன்று; அவை பெருக்கெடுத்து ஒடுங்கால், பெரிய யானைகளையும் அடித்துச் செல்லும் ஆற்றல் உடிைய அக்கொடிய வழியைப் பகலில் கடத்தலே இயலாது என்றால், அவ்வழியில் இரவில் வருவார்க்கு எத்துணைப் பெருங்கேடு உண்டோமோ! காட்டு வழியின் இயல்பு இது என்பதை அவள் அறிவாள்; அதனல் தன்னக் கண்டு, தனக்கு இன்பம் ஊட்டுவதற்காக, இளைஞன், கொடுமை மிக்க அவ்வழியில் இரவில் வருவதை அவள் விரும் பவில்லை. அவ்வாறு வருவதால், அவனுக்கு ஏதேனும் ஏதம் உன்டாய்விடின் என் செய்வது என எண்ணி நடுங்கிற்று அவள் உள்ளம்.

ஒருநாள் தோழியை அழைத்தாள்; தோழி! இயல்பா கவே அஞ்சும் இயல்புடையது என் நெஞ்சம்; ஆந்தை மயிைல் ஒலிக்கக் கேட்டாலும், நம் மனேக்கு எதிரே உள்ள பலாமரத் தில், குரங்குகள் பாய்வதால் ஒலி எழுந்தாலும் அஞ்சி நடுங் கும் இயல்புடையது என் நெஞ்சம், ஆனால், அவ்வாறு அஞ்சும் நிலையை, அது இப்பொழுது கடந்துவிட்டது; இப் பொழுதெல்லாம், அது, நம் காதலன் வரும் காட்டின் கொடு மைகளை மனக் கன்முன் கண்டு, நடுங்கி நடுங்கி அழியத் தொடங்விட்டது; அதனல் ஆது, முன் அஞ்சியன கண்டு, இப் பொழுது அஞ்சுவதில்லை; அதனினும் பெரிய அச்சம் அதைப்

புல்வி - அனைத்துக்கொண்டு; அன்னே . அந்தோ; என் மற்ை தனன் கொல் - எதைச் செய்ய மேற்கொன்டானே; ஆரம் - சந்தனம்; மாரி யாகனயின் மழையில் நனைந்த யானைபோல்,