பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

வாழாள்; கணவர் இறந்தால் அவரோடு தாமும் உயிரிழந்து போகாது, அவர் இறந்த பின்னரும் உயிர்வாழ்ந்து, கைம்மை நோன்பு நோற்றுக் காலங்கழிக்கும், கற்பின் மாண்பறியா மகளிர் போன்றவள் அல்லள் உன் காதலி; நீ இறந்தால், அவளும் உயிரிழப்பாள்; ஆகவே அன்ப! அக்காட்டு வழியை இரவிற் கடந்து வருதலை அஞ்சுகிறேன்’ என்று கூறிள்ை.

ஒரு பென், தன் தோழியின் காதலன்முன் நின்று, க.அன்ப! உன் காதலிபால் கொண்ட அன்பின் மிகுதியால் நீ இறந்து போவாய்; அவ்வாறு நீ இறந்தால், உன் காதலியும் உயிர் இழப்பாள்” என்பன போன்ற சொற்களைக் கூறல் மங்கலமுறையோ, மரபு நெறியோ ஆகாது என்பதைத் தோழி அறிவாள்; ஆதலின், இளைஞனுக்குத் தான் கூறக் கருதிய அக்கருத்துக்களை, அவ்வாறே, அச்சொல்லுருவில் கூறிஞளல்லள்; தான் கருதிய அக் கருத்து, அவன் உள்ளத் தில் தானே தோன்றத் துணை புரியவல்ல மறைமொழிகளால் உணர்த்த விரும்பிளுள்; அதனல், இரவில் வாரற்க’ என்று கூறுவதன் முன்னர், “அன்ப! உன் நாடு, தன்யால் அன்பு மிகக் கொண்ட ஆண்குரங்கு இறந்து போக, அதன்பால் பிரி வறியாப் பேரன்புகொண்ட பென் குரங்கு, அது இறந்த பின்னர் இருந்துவாழ விரும்பாது, மரமேறுதலும், வரை பாய்தலும் ஆகிய தன் இனத்தொழிலக் கற்றுத் தெளியாத இளம் பருவம் உடைய தன் குட்டியைத் தன்ைேடு வாழும் தன் இனக் குரங்குகளிடத்தே ஒப்படைத்துவிட்டு, உயர்ந்த ஒரு மயுைச்சியை அடைந்து, ஆங்கிருந்து, கீழே உருண்டு வீழ்த்து உயிர்விட்டு உயர்வடையும் சிறப்புடையது’ எனப் பாராட்டினுள் இவ்வாறு அவன் நாட்டைப் பாராட்டுமுகத் தான், உன் நாட்டு விலங்குகளிடத்தே காணப்பெறும் இவ் விழுமிய பன்பு, எங்கள் நாட்டுப் பென்களிடத்தும் உண்டா கும் என்பதை உணர்வாயாக என அறிவுறுத்தினுள், எவரும் விதிற் கறத்தகாத ஒரு பொருளை, மங்கல மரபால் மாண்

கூறிய தோழியின் அறிவுமாட்சி அறிந்து மகிழ்தற்குரிய ரு . . . . .