பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8?

கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி, கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி ஒங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர்செகுக்கும் சாரல்நாட! நடுநாள் வாரல், வாழியோ! வருந்துதும் யாமே"a ஒடி ஆடித்திரிந்து மகிழ்ந்த மகள் மணப்பருவம் பெற். றமை அறிந்ததாய், வீட்டைக்கடந்து, அவள் வெளிச் செல் லாவாறு காப்பதில் கருத்துடையளாளுள்; அதனல் காத லனேப் பகற்காலத்திலும் காண்பது இயலாதுபோயிற்று; இரவில் வருதல் இன்னல் நிகழ்தற்கு ஏதுவாம் என அவள் அஞ்சுவதாலும், ஏதம் பாராது வரினும், காவல் மிகுதியால், அவளைத் காண இயலாது வறிதே மீண்டு அவன் வருந்து வதாலும், அப்பெண்கள் இருவரும்கூடி, இளைஞனைப், பகலில் வாரற்க இரவில் வருக’ என்றும், இரவில் வாரற்க, பகலில் வருக’ என்றும் மாறிமாறிக் கூறி, இறுதி யில், இனி எக்காலத்தும் வாரற்க’ எனக் கூறிவிட் டனராயினும், அவன் வாராமையால், அவள் பெரிதும் வருந் தினுள்; அவனைக் காணுக் கலக்கம் பெரிதாயிற்று; அதனல், அவன்வரினும் ஏதமாம், வாராதிருப்பினும் ஏதமாம் என அறிந்தனர்; காதலனேடு இணைபிரியாது வாழ்தலும் வேண்டும்; அவ்வாழ்க்கையால் அவன் உயிர்க்கும், அவள் நாணிற்கும் கேடின்மையும் வேண்டும் என விரும்பினர்; அவ் வாறு விரும்பிய அப்பெண்கள், அதற்கு, இக்களவு வாழ்க்கை ஏற்றதன்று பலரும் அறிய மணந்து வாழ்

a. குறுந்தொகை: 69. கடுந்தோட்கரவீரன். தா கலை-தாவும் தொழில்வல்ல ஆண்குரங்கு, பெரும் பிறிது-இறப்பு: உற்றென. அடைந்ததாக கைம்மைகைம்மை நோன்பு நோற்பதால் உளதாம் துன்பம்; உய்யா-போக்கமாட்டாத காமர்-அன்புமிக்க மந்தி-பெண் குரங்கு கல்லா-தம் தொழில் அறியா, வன்பறழ்-இளங் குட்டி; செகுக்கும் . மாய்த்துக்கொள்ளும் வாரல் வாராதே,

கு-4