பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தலே ஏற்றதாம் என்பதும் அறிந்தனர்; ஆனால், இளைஞனே விரைவில் மணந்துகொள்பவளுகத் தோன்றவில்லை, மணந்து கொள்ளும் எண்ணமே அவனுக்கு உண்டாகவில்லை; அவ்வெண்ணத்தைப், பிறரே அவனுக்கு ஊட்டுதல் வேண்டும்; ஆனல், அதைச் செய்ய அவர் பெண்ணுள்ளம் நாணிற்று, பெண் ஒருத்தி, தன்னைக் காதலிப்பான் முன் நின்று, என்னை மணந்துகொள்வாயாக’ எனத் தானே கூறுதல் அவள் பெண்ணியல்பிற்கே இழுக்காமெனினும் அவ்விழுக்கினே எண்ணிக்கருதுவிடுதலும் ஏதமாம்; அதனல் அதைத் தாமே கூறத் துணிந்தனர். ஆனால், அதை வெளிப்படக் கூறக் கருதாது, “இப்பெண்கள் எண்ணம் மணத்தின் கண் உளது” என்பதை, அவன்” தானே. உணர்ந்துகொள்ளும் வகையில், அதற்கு ஏற்றவாறு கூற வேண்டும் எனத் துணிந்தனர். .

அவ்வாறு துணிந்த அவர்கள், அவன், தம்மைக் காணும் விருப்போடு, தம் மனக்குவந்து, தம் வரவை எதிர் நோக்கி ஓரிடத்தே மறைந்திருக்கும் காலத்தே, அவர்கள் அவன் வருகையை அறிந்தும், அறியாதார்போல் சென்று தம் குரல் அவனுக்குத் தெளிவாகக் கேட்கும் தொலைவில் இருந்து, அவனைக் காளுமையால் தமக்குண்டாகும் கலக்கம், தம்மைக் காணவருவதால் அவனுக்கு நேரவிருக்கும் கேடு கள், அக்கேடறிந்து தாம் படும்துயரம், தம் களவொழுக் கத்தை அறிந்துகொண்ட தாயின் கொடுமை, அதை அறிநது கொண்ட ஊரார் கூறும் அலர் ஆகியவற்றை மாறி மாறி, உரைத்துத் தமக்குள்ளே வருந்துவதை வழக்கமாகக் கொள்ளலாயினர்.

அவர் அவ்வாறு வருந்திக் கூறுவனவற்றை நாள் தோறும் கேட்கும் அவன் உள்ளத்தில், அவர் இவ்வாறு வருந்து வதற்குக் களவு வாழ்க்சையில் தான் கொண்டுள்ள ஆசையே காரணம் என்ற எண்ணம் மெல்லத் தலைதுாக்கும்; இறுதியில், “இக்களவு நெறியை மேலும் விரும்பினுல், இவள் உயிர்க்குக்