பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

கேடாம்; ஆகவே மணத்திற்காம் முயற்சிகளே இன்றே மேற்கொள்வேன்’ எனும் துணிவுபிறக்கும்; அப்பெண்கள். தம் முயற்சி வெற்றி பெறத், தாம் கருதியது கைகூடக் கண்டுகளிப்பர்; பழந்தமிழ்ப் புலவர்கள், இம்முறைக்குச் சிறைப்புறமாக வரைவு கடாவல் எனும் பெயரிட்டுப் பாராட்டியுள்ளனர். அவற்றுள் ஒரு சில: இன்று வாராாாயின் நன்று:

தினே அறுவடையாகும் காலத்தில், தினை அறுப்பார் இரவில் உறங்கார்; முற்றிய தினை ஒருநாள் கழியினும் உதிர்ந்து விளும்; அதனல் அதை அதற்குரிய பருவத்திலேயே அறுத்துவிடுதல் வேண்டும்; ஆனால், ஊரைச் சுற்றியுள்ள எல்லாப் புனமும் ஒரே காலத்தில் முற்றிவிடுவதால் அறுவடைக்கு ஆள் கிடைப்பது அரிது! அதனல், இரவிலும் உறங்காதிருந்து அறுத்தெடுப்பர்; அப்பொழுது புனத்தில் ஒலி ஓயாது; அப்புனத்தில் எழும் ஒலிபோல், அன்று ஊரிலும் ஒலி ஒயவில்லை; ஊர்க்காவலர் உறங்கவில்லை; இரவின் இடை யாமம் ஆகியும், அவர் எழுப்பும் தொண்டகப்பறை ஓயாது ஒலித்துக்கொண்டேயிருந்தது.

காதலன் நினேவால் உறக்கம் ஒழிந்து கிடந்தாள் அப்பெண்; அவள் அருகில், அப்பறையொலி கேட்டு நடுங்கிய வாறே வீற்றிருந்தாள் தோழி; இந் நிலையில் இளைஞன் வந்துவிடுவளுே? வருவானே ஊர்க்காவலர் கண்டுவிடுவாரோ? அதஞல் என்னென்ன விளையுமோ” என எண்ணி எண்ணி அஞ்சிற்று அத்தோழி உள்ளம்; அந்நிலையில் அவன் வந்துவிட்டான்; அவனைத் தோழியும் பார்த்துவிட்டாள்; உடனே, அவன் வருகையை அறியாதாள்போல், அவன், கேட்குமாறு, அப்பெண்ணை நோக்கித் தோழி! காவலர் கண்ணுறங்காது காவல் புரிகின்றன ; அவர் எழுப்பும் தொண்டகப் பறை ஒலித்தவாறே உளது. இந்நிலையில் காதலர், நம் துயர் துடைகக வருவதினும், வாராமையே நன்று; வந்து அவர் அளிக்கும் இன் பத்தினும், வரும் அவ ரைக காவலர் கண்டுகொள்வதால் வரும்துன்பம் பெரி