பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

தாம்; ஆகவே, அவர் வாராமையை விரும்புகிறது என்

உள்ளம்’ என்று கூறினுள்.

1.அம்ம! வாழி தோழி! இன்று அவர் வாரார் ஆயிகுே நன்றே; சாரல் சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்து இரவு அரிவாரின் தொண்டகச் சிறுபறை பாளுள் யாமத்தும் கறங்கும் யாமம் காவலர் அவியாமாறே.'a

மணத்திற்கு இது காலம்:

காதலன் இன்று வாராணுயின் நன்று எனத் தோழிகறக் கேட்ட அப்பெண், தோழி! அவர் வரவிற்கு, ஒவ்வொரு நாளும், இவ்வாறே இடையூறு நேர்ந்துவிடுகிறது; அதனல் அவரைக் காணுக் கலக்கம், பெரிதாகிறது; அக்கலக்க மிகுதி யால், என் உடல் பசலை படர்ந்து பாழுற்றுக் கெட்டது; எனினும், அவர்மீது கொண்ட காதல் குறைந்திலது, அது அவர் பால் சென்று, அவர் உள்ளத்தையே சுற்றிச் சுற்றி அகிைறது; ஆல்ை அவர் உள்ளத்தில், என்பால் அன்பு பிறந்திலது, அதனல், பெண்களுக்கு அணியாய் அழகு தரும் அடக்கம் முதலாம் பெண்மைக் குணங்கள் என்னைவிட்டு எங்கோ சென்று மறைந்தன; அறிவு ஒன்றே என்பால் உள்து. ஆனல் அதுவும், வாளா இருக்கவில்லை; காதலர் தாமே வந்து வரைந்து கொள்ளார்; ஆகவே, அவரிபால் நாமே சென்று வரைவிற்கு வழிகாணுவோம் வருக ஆங்கே” என இயலாத ஒன்றை ஓயாது கூறி என்ன வருத்துகிறது. ஆகவே உங்கள் நலம் யாது?” என்று வினவி, நம்மை

A குறுந்தொகை 375

வியன்கண் - அகன்ற இடம் இரும்புனம் - பெரிய கொல்லை; அரிவாரின் - அரிவாரைப்போல்; தொண்டகம்மநைாட்டுப் பறைவகையுள் ஒன்று பானுள்.இடை இரவு; கறங்கும்.ஒலிக்கும்; அவியாமாறு.உறங்காமையால், உறங். காமையால் ஒலிக்கும். - .