பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

மணந்து, துயர் தீர்க்கும் நல்லுள்ளம் அவர்க்கு உண் டானல், அதற்கு இதுவே ஏற்ற காலமாம்; தோழி! அவர் அதைச் செய்வாரா?’ என்றுகூறி, மணக்கத் துடிக்கும் தன் மன நிலையை எடுத்துக் காட்டினுள்.

“பயப்பு, என்மேனியதுவே; நயப்பு, அவர் நார்இல் கெஞ்சத்து ஆர்இடையதுவே: செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே ஆங்கண் செல்கம் எழுக என, ஈங்கே வல்லா கூறி இருக்கும்; முள் இலைத் தடவுகிலைத் தாழைச் சேர்ப்பர்க்கு இடம் மன் தோழி! எங் நீரிரோ எனினே.” .

வெறியாடல் காணக் காதலர் வருக!

பகாதலர் வரைந்துகொள்ள வருவாரா” என்று அப் பெண் தன் வேட்கையைப் புலப்படுத்த, அது கேட்டி. தோழி, பெண்ணே! அவர் வரைந்துகொள்ள வரினும் வாராரா யினும்; வெறியாடல் காண வருத ைநான் மிகவும் வேண்டுகி றேன்; தோழி! நம்மைப் பேணிக் காக்கும் பேரன்பினளாய தாய், நம் வாட்டத்திற்காம் காரணம் இது என்பதை எளிதில் அறிந்து கொள்வாள்; அவள் அஃது அறியின், நம் களவொழுக்கத்திற்குக் கேடாம்; ஒரோ வழி, அவள் அதை அறியாளாய், அதற்குக் காரணம் யாதென வேலனைக் கேட்

குறுந்தொகை 1 219. வெள்ளுர் கிழார் மகளுர்

வெண் பூதியார். மேனியது-மேனிக்கண் உளது: நயப்பு-காதல்; நார்இல். அன்பு இல்லாத, ஆர் இடையது-புகுதற்கு அரிய இடத்தின் கன் உளது; ஆங்கண் - ஆத்தவைர்பால்; வல்லா-நம்மால் செய்யமாட்டாத ஒன்றிை, தடவுநிலைத் தாழை -பருத்த அடி களையுடைய தாழை; சேர்ப்பன்-நெய்தல் நிலத்தவைன்; இடம்மன்.இதுவே காலமாம்; எந்நீரிரோ - எந்நிலையில் உள் ளிர்; எனினே-என்று கேட்கும் எண்ணம் உண்டாவின்.