பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

ான் நோய் மிகினும் நான் பொறுத்துக்கொள்வேன்” என்று கூறிஞள்.

இவ்வாறு கூறிய அவள் கூற்று, தான் விரும்பிய காதலனைத் தாயும் தந்தையும் தரத் திருமணம் கொண்டு அன்பு கலந்த இன்ப வாழ்க்கை மேற்கொள்ள விரும்பும் அவள் உள்ளத்தை அவன் அறியத் துணை புரிந்தது.

வெறி என உணர்ந்த வேலன், கோய் மருந்து

அறியான் ஆகுதல் அன்ன காணிய அரும்படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும் வாரற்க தில்லை தோழி!... இலங்கு மலை நாடன் இரவிஞனே.” a

இன்னும் வாழ்கிறேன் தோழி!

தாய் எடுக்கும் வெறியாட்டின் கொடுமையினே இளைஞன் அறியமாட்டான்; அவன் மனத்தை மணவினைக்குத் துரத்த, அதைக் கூறுவது ஒன்றுமட்டுமே போதாது; நாம் எதையும் செய்ய மாட்டாது, செயலற்றுக் கிடக்கிருேம்; எதற்கும் அவன் துணையையே எதிர்நோக்கி நிற்கிருேம் என்பதை அவன் உணர்தல்வேண்டும்; அதன் பின்னரே அவன் மனம் மணத்தை நாடும் என எண்ணிற்று அப்பெண்ணின் பேதை உள்ளம், எண்ணியதோடு நில்லாது, அதைக் கூறவும் துணிந் தது; உடனே, தன் எதிரில் இருக்கும் தோழிக்குக் கூறுவாள் போல், வந்து மறைந்து நிற்கும் காதலன் கேட்கும் வண்ணம் கீழ்வருமாறு கூறத் தொடங்கிளுள் ! -

டி குறுந்தொகை 1 360. ஈழத்துப் பூதன் தேவஞர்.

வெறி என - நோய் தீர்க்கும் மருந்து; வெறிபாடலாம் என; காணிய அறிதற் பொருட்டு; அரும் . தாங்குதற்கரிய, வடர் எவ்வம் . காதலன் நினைவால் உண்டாகும் துன்பம்; உழப்பினும் . அனுபவித்தாலும், தில்ல - விருப்பம் குறிக்கும் ஓர் இடைச்சொல், ! :