பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

மற்றுக்கோடாக அடைந்தாரைக் காக்கும் பொறுப்பு அவரையே சாரும்; ஆளுல், அவரோ, இன்று தம் கடமை மறந்து வாழ்கிறார், வேற்றுவரைவு நேருமே; அதனுல், காதலி வாழ்விழந்து போவளே’ என அறியும் அறிவின்றித் திரிகிருt; மணம் செய்துகொள்ளும் கருத்து அவருக்கு இருப் பதாகத் தோன்றவில்லை; அக்கருத்து, அவருக்கு இருப்பினும், இல்லையாயினும் நான் அவருக்கு அதை எடுத்துக் கூறுதல் பொருந்தாது, அதை, அவர், தாமே உணர்தல் வேண்டும்; உணராத அவருக்கு, நான் சென்று உரையேன்” உன்று கூறினள்.

மதுறைவன்

குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிதுஒன்று அறியாற்கு உரைப்பலோ யானே? எய்த்த இப் பணை எழில் மென்தோள் அணஇய அந்நாள் பிழையா வஞ்சினம் செய்த கள்வனும், கடவனும், புணைவனும் தானே.” a

தும் இருவர் குறித்தும் இசங்குகிறது என் உள்ளம்:

தன் காதலியும் அவள் தோழியும் கூறிய அனைத்தையும் கேட்டான் இளைஞன்; அவர், தமக்குள்ளே கூறிக் கொன் டாராயினும், அது, தன்னை நோக்கிக் கூறியதே என்பதை யும் அறிந்தான்; அறிந்தும் தன் போக்கினே மாற்றிக் கொண் டானல்லன், களவொழுக்க இன்பத்தில், அவன் உள்ளம் அவ்வளவு ஆழமாகப் பதிந்துவிட்டது; அதனால், எவரும்

a குறுந்தொகை 318, அம்மூவளுர், துறைவன்.நெய்தல் நிலத்தவேளுய காதலன்; குறி யான்-மனங்கொள்ள நினையான்; பிறிதுஒன்று-வேற்று வரைவு, உரைப்பலோ.சொல்லுவேனே? எய்த்த-இளைத்த; பண எழில்-மூங்கில் போன்ற அழகு; அணேஇய-தழுவிய, கடிவனும்.கடமை உடையானும்; புனேவனும்-பற்றுக் தோடாவானுக். -- - -