பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

லாம்; அந்நோய் மேலும் பெருகினல், அதை அவளால் தாங்கிக்கொள்ளுதல் இயலாது; அதைப் பொறுத்து உயிர் வாழும் வன்மை அவள் உடலிற்கு இல்லை; அவள் உயிரும், உடலும் ஒருங்கே அழிந்து பாழாம்; ஆகவே, மணத்திற்கு ஏற்ற காலம் இதுவென அறிந்து, விரைந்து வந்து வரைந்துகொள்வாயாக” என வேண்டிக் கொண் டாள்.

1. வேரல் வேலி வேர்க்கோள் பலவின் சாரல் நாட! செவ்வியை ஆகுமதி: யார் அஃது அறிந்திசிஞேரே! சாரல் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள் உயிர் தவச்சிறிது; காமமோ பெரிதே'a கள்வி நம் காதலி :

காதலியும், அவள் தோழியும், தன்னக் காணுதாரி போலக் கூறியவற்றைக் கேட்டே, இளைஞன் உள்ளம் ஒரளவு மன முயற்சியின் பால் சென்றது; தோழி முன்னின்று கூறிய சொற்கள். அதை மேலும் உறுதி செய்தன; இவை அனைத்திலும் மேலாக, தன்னைக் கண்டு மீளும் காதலி, தம் காதல் ஒழுக்கத்தை அவள் தமர் அறியாவாறு மறைத்து வாழும் தடுமாற்ற வாழ்க்கை, திருமண முயற்சியை விரைந்துகொள்ளத் துான்டிற்று.

ஒருநாள் இரவு; அவன், வழக்கம்போல் காதலியைக் காணச் சென்றிருந்தான்; அவள், அவன் விரும்பும் ஆடை அணிகளால் தன்னை அழகு செய்துகொண்டு, நல்ல மனம் தரும் மலர்களைக் கூந்தலில் சூடிக்கொண்டு வந்தாள்; அவன் மனம் மகிழும், வண்ணம், அவைேடு உளங் கலந்து உரையாடி

2 குறுந்தொகை: 18. கபிலர். a

வேரல் வேலி-சிறு மூங்கிலால் ஆகிய வேலி, வேர்க் கோள்-வேரில் பழுக்கும்; செவ்வின்ய ஆகுமதி-ஆவளை மணந்துகொள்ளும் அறிவுடையான் ஆகுக, அறிந்திகினேர். அறிந்தவர்; கோட்-கிளையில், துரங்கியாங்கு.தொங்கியது ப்ோல, தவச்சிறிது.மிகவும் சிறிது.