பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிருந்தாள்; பொழுது புலரத் தொடங்குவது கண்டு தன் மனேக்கு மீண்டாள்; காலையில், அவள் மனைக்கு அயலான் போல் சென்ற இளைஞன், ஆங்குக் கண்ட காட்சி, அவனே வியப்பிற்குள்ளாக்கிற்று; அதுவே மண முயற்சியைத் துரண் டும் தூண்டுகோலுமாய் அமைந்தது. இரவு தான் சூட்டிய மலர்கள் அவள் கூந்தலில் இல்லை; அவற்றை எடுத்து எறிந்து விட்டு, இரவுப் புணர்ச்சியால் கலந்த கூந்தலுக்கு எண் ணெய் இட்டு, வாரி முடித்திருந்தாள். அவளை அந்தியிைல் கண்டவர் எவரும், அவள் காதல் நோயால் வருந்துகிருள்: இரவு காதலன்பால் சென்று, அவளுேடு மகிழ்ந்து வந்துள் ளாள் எனக்கூருt; தன் தோற்றத்தை அந்த அளவு மாற்றிக் கொண்டிருந்தாள்; மாற்றம் அவள் தோற்றத்தில்மட்டும் இல்லை; அவள் செய்கையிலும் அம்மாற்றம் காட்சி அளித்தது. இரவு மனங் கலந்து மகிழ்ந்த காதலனைத் தன் மனேயில் கண்ட அவள் அவன் பால், புதியான் ஒருவன்பால் பழகுவது போன்றே பழகிளுள்; அவள் அவைேடு பழகியதைக் காணும் எவரும், அவளும் அவனும், காதலியும் காதலனுமாவர் எனக் கூருர்; அந்த அளவு, தன் செய்கையையும் மாற்றிக் கொண்டாள்; இதைக் கண்ணுற்றான் இளைஞன், கண்டு, காதலியின் அறிவாற்றல் அறிந்து ஒருபால் மகிழ்ந்தானே னும், அவள், இவ்வாறு, இரு வேறு வாழ்க்கையினளாய், இருவேறு சூழ்நிலையில் வாழ்பவளாய் நடந்துகொள்ள, எத் துணைப் பாடுபடுதல் வேண்டும் என எண்ணினன்; அந்நிலை காண இரங்கிற்று அவன் உள்ளம்; இத்துணைப் பாடும் என் பொருட்டன்றாே? என்பொருட்டு இவ்வாறு வருந்து வாளை, மேலும் வருத்துதல் கூடாது; ஆகவே இவளை விரைந்து வந்து வரைந்துகொண்டு இவள் துயர்துடைத்தல் வேண்டும்’ எனத் துணிந்தான். . .

இர ண்டு அறி கள்விகம் காதலோளே, முரண் கொள் துப்பின் செவ்வேல் மலையன் முள்ளுர்க் கானம் காற வந்து,