பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

கிறது. காதலர் பிரிவால் கற்பு வாழ்வு கிட்டா தாயின், அந் நிலையில் அதுவும் நம்மைவிட்டு அகலும்’ எனக்கூறிக் கலங் கிளுள். காதலன், தன்னைத் தனியே விடுத்துப் பிரிந்து போகத் துணிந்துவிட்டான் என்பதை அறிந்து கலங்கும் அந்நிலையிலும், “நாம் இழக்கக் கூடியது உயிர் ஒன்றே; சிறந்த பொருள் வேறு எதுவும் இல்'ை; எனத் தன் இழப்புப் பெரிதன்று எனக் கருதுவாள்போல் கூறிய அவள் சொல் திறம் மகிழ்தற்கு உரியது. -

1. விரிநீர்ச் சேர்ப்பன், கீப்பின், ஒருநம் இன்னுயிர் அல்லது பிறிது ஒன்று எவனே, தோழி! நாம் இழப்பதுவே ,

அவன் ஞாயிறு, நான் நெருஞ்சி :

பொருள் ஈட்டும் கருத்துடிையளுய்க் காதலன் பிரியத் துணிந்தான் எனக் கேட்ட காதலி, தொடக்கத்தில் கலங் கிளுள் என்றாலும், கணவன் மனைவியர்க்கிடையே இருக்க வேண்டிய உறவுமுறை நினைவு வரப்பெற்றதும் அக்கலக்கத் தைக் கைவிட்டாள், கணவன் மனைவியர்க்கிடையே கருத்து வேறுபாடு இருத்தல் கூடாது; மனேவி தனக்கெனத் தனிக் கருத்துடையளாதல் கூடாது. அவன் கருத்து ஒன்றாக, அவள் கருத்து வேருக வேறுபடுதல் கூடாது. அது ஒன்று பட்ட உள்ளமுடைமைக்கு ஊறுவிளைவிக்கும், கணவன் கருத்தே அவள் கருத்தாதல் வேண்டும்; அவன் எதை நினைக் கிருனே, அதையே அவளும் நினைத்தல் வேண்டும். அவன் ஆசை எதுவோ, அதுவே அவன் ஆசையாதலும் வேண்டும். இவ்வுறவு முறையை உணர்ந்தவள் அவள். அதனல் காதல்

2 குறுந்தொகை : 334. இளம்பூதனர். விரிநீர்.பரந்த நீர்நிலை, கடல்; சேர்ப்பன்-நெய்தல் நிலத் -இவன்; நீப்பின்-பிரிந்தால். நாம் இழப்பது பிறிதொன்று

வன் என மாற்றுக.