பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழ்மொழி இனிமை வாய்ந்தது. நயம்பட உரைக்கும் நாநலம் வாய்க்கப் பெற்றவர் தமிழர்; மக்கள் இன்சொல் கேட்க மகிழ்வரேயல்லது வன்சொல் கேட்க மகிழார் என்ற மக்களின் மனவுணர்வின் உண்மையை உணர்ந்தவர் தமிழர். ஆகவே, அவர்கள் என்றும், எங்கும், கேட்டாரைப் பிணிக் கும் வகையில் சொல்லாடித் தம்மை விரும்பும்வகையில் கேளாரையும் வயப்படுத்தி வெற்றி கண்டு வாழ்ந்தனர். இனிய சொற்கள் இருப்பவும், இன்னத சொற்களை வழங்கு தல், இனிய கனிகள் இருக்கவும், இன்னத காய்களேத்தேடித் தின்பதற்கு நிகராம் என நினைந்து, இனிய சொற்களையே தேர்ந்தெடுத்து வழங்கினர்கள். நிற்க.

இனிக்கப் பேசி இறவாப் பெருநில வாழவேண்டும் என்று விரும்பிய தமிழர்க்கு, அவர் வழங்கும் மொழியும் பெரும் துணை புரிந்தது. இனியவே வழங்கிய அவர்களின் மொழியும், முழுக்க முழுக்க இனிக்கும் ஒலிகளினலேயே உருவாகித் திகழ்ந்தது. ங், ஞ், ண், ம், ன், போலும் மெல்லொலிக் கலப் பால், தமிழ்மொழி உருவாகத் துணைபுரியும் சொற்களனைத் தும், இன்னெலியுடையவாகவே ஒலித்தன. அதனல், தமிழ் மொழி இனிமை வாய்ந்து திகழ்ந்தது. இனிமையால் இயன்ற இளமகளிர் என்ற பொருள்பட வந்த “தமிழ் தழி இய சாயலவர்’ என்ற தொடரில், தமிழ் எனும் சொல்லே இனிமை எனும் பொருள் உடையதாகும் எனக்கூறித் தமிழ் மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்து சென்றார், சிந்தாமணி எனும் பெருங்காப்பியப் பேராசிரியர் திருத்தக்க தேவர். ண்ைதமிழ்’ ‘தேமதுரத் தமிழோசை” தமிழ் எனும் இனிய தீஞ்சொல்’ என்றெல்லாம் பெயர் சூட்டிப், புலவர் கள், தமிழின் இனிமைப் பண்பைப் பாராட்டிப் பரவியுள் ளனர்.

இனிய சொற்களைத் தேர்ந்து, இனிமையாக வழங்க விரும்பிய தமிழர். நாம் கூற விரும்பிய ஒவ்வொரு கருத்தும்