பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g

தன் காதலால் நம்மை மகிழ்வித்த காதலர் பிரிவால் நம்மை வருத்துவர் என்பதை அறிந்தும், என் உள்ளம் அவர் பின் செல்லும்; அவர் எண்ணியதையே எண்ணும்; ஆகவே, தோழி! அவர் பிரிவு பொருது துயர் உற்று வருந்துவேன் எனும் கவலை உனக்கு வேண்டாம்” என்று கூறி, அவளைத் தேற்றினுள்,

தேற்றவேண்டிய நான் வருந்திக் கிடக்கத் தன்னைத் தேற்றும் தெளிவு இவளுக்கு எவ்வாறு பிறந்தது என வியந் தாள் தோழி. அவள் வியப்புணர்ந்த அப்பெண், தோழி! கல்லும் மரமும் நிறைந்தமையால் நீல நிறம் வாய்ந்த அவன் மலையில் வெண்ணுரை தெரிக்க வீழ்ந்தோடும் அருவியைக் கண்டவர்க்கு, நீல நிறக் கடலில் தோன்றும் பிறைத் திங் களின் பேரழகுக் காட்சி நினைவுண்டாதல் போல், நெருஞ்சி மலர் இயல்பறிந்த என் அகக்கண்முன், மனைவியர்க்குரிய மாண்பு புலயிைற்று; அதனல் அவர் பிரிவறிந்து புலம்புவது கைவிட்டேன்’ எனத், தனக்கு அத்தெளிவு பிறந்த வழி பிளேக் கூறிவிட்டு, தோழி! இந் நல்லறிவு தந்த அந் நெருஞ்சி நெடிது வாழ்க’ என வாழ்த்தினுள். -

“எழுதரு மதியம் கடல்கண் டாஅங்கு ஒழுகுவெள் அருவி ஓங்கு மலைநாடன் ஞாயிறு அனையன்; தோழி; - நெருஞ்சி அனைய என்பெரும் பணத்தோளே’ a

உாம்செத்தும் உளென்:

காதலன் பிரிவால் உண்டான கடுந்துயரைக்; காதல் மண்யாளின் கடமையை நினைந்து ஆற்றிக் கொள்வதும்

a குறுந்தொகை1 315, மதுரை வேளாதத்தன்.

எழுதரு மதியம். தோன்றும் பிறைத்திங்கள்; ஒழுகு-ஓடி வரும்; பணத் தோள்-மூங்கில் போன்ற தோள்கள்; நாடன் ஞாயிறு அனேயன்; தோள் நெருஞ்சி அணைய, அணய-போன்

றன,