பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



காரணம் ஆகியவற்றைத் தன் தோழியிடம் கூறவிரும்பிளுள்: தன் துயர் மிகுதியைப் பிறரிடம் கூறுவதால், அத்துயரளவு குறையும் என்ற எண்ணம் ஒரு பால் தூண்ட, தன் துயர் அறியும் தோழி அத்துயர் போக்கும் வழி காண்பன் எனும் துணிவு ஒரு புறம் தூண்டத் தோழியால் சென்றாள். தோழி தினேப்புனம் காத்திருந்த காலத்தில் நான் ஓர் அரிய காட்சி யைக் கண்டேன். அதன் உண்மை இன்றுதான் புலனுயிற்று. தோழி! புனத்தில் தினக்கதிர் பொன்னிறம் பெற்று முற்றத் தொடங்கியதும், கிளிகள் கூட்டங் கூட்டமாய் வந்து அக் கதிர்களைக் கொய்து சென்றன. தினத்தாளுக்கு அது ஈனும் கதிரே இன்றியமையாப் பயனும்; அதை இழந்த பின்னர், தாள் மடியாது வாழ்தலில் பொருள் இல்லை; ஆளுல், கிளி கள் கொய்துகொண்டு போய்விட்டமையால், தம் பயனே இழந்த பின்னரும், தாள்கள் மடிந்து போகாது உயிர் வாழக் கண்டேன். அவை அவ்வாறு உயிர் வாழ்த்தது, அவை பண்டு பெற்ற மழை நீரால். அம்மழை நீர், அறவே வற்றிப் போகா மல் இன்னமும் சிறிது உண்மையால் மடிந்து போகாது, மாருகப் புதிய தளிர் ஈன்று த ைநிமிர்ந்து நின்ற தாள்கள், பின்னர்ப் பெருமழை பெய்தமையால், மீண்டும் கதிர் ஈன்று பயன் பெற்றன. அக்காட்சியை அன்று கண்டேன். அத் தினத் தாள்பால் அன்று நான் பெற்ற அறிவு, இன்று என்னே வாழச் செய்கிறது. தோழி! நாட்டவர் போற்றும் பெருமை யுடையது என் நலம், அந்நலத்தைக் காதலர் துகர்த்துவிட் உார்; அதனுல் நாணம் நிறை முதலாம் பெண்மைக்குரிய வன்புகளை இழந்துவிட்டேன். அவற்றை இழந்தும் இறவாது உயிர் வாழ்கிறேன் நான். நம் காதலர் நம்மீது பண்டு சொரிந்த அன்பின் நினைவால், அந்திணைப்பு என் நெஞ்சில் இன்னமும் மறையாது நிற்பதால் நான் உயிர் கொண்டு உலாவுகிறேன். தோழி! என்சே வாழ்விப்பது அந்நினைவு ஒன்று மட்டுமன்று. பண்டுபெற்ற மழை நீரால், கதிர் இழந் தும் உயிர் வாழ்ந்த தினத்தாள், பெருமழை பெய்யும் எனும் ாம்பிக்கையால் பொறுமை காட்டி, அம்மழையை எதிர் காக்கி வாழ்ந்தமையால், மீண்டும் கதிர் சன்று பெருமை