பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நாங்கள் காதல் விளையாட்டு நிகழ்த்துவதையும் கானது, நீர்நிலையையே நோக்கிக் கிடந்த அந்நாரையின் செயல்கண்டு நானும் அறிவிழந்து போனேன். காதல் மிகுதியால், இன்று அன்பு காட்டும் இவர், பின்னர் அறவே கைவிட்டுப் போத லும் உண்டாம்; அந்நிலை ஏற்படுங்கால், நமக்குச் சான்றளிக் கவல்ல சிலர் உடனிருத்தல் வேண்டும் என்பதை மறந்து போனேன், தோழி! அன்று, என்னை இமைப்பொழுது பிரிய நேரினும் பெரிதும் கலங்கும் அவர், இன்று சென்று இத்தனை நாளாகியும் வாராமை கண்டு, அவர் நம்மை மறந்து கைவிட் டாரோ என எண்ணிக் கலங்குகிறது என் உள்ளம். அவ் வாறு அவர் கைவிட்டால், தோழி! நான் என் செய்வேன்? எவ்வாறு உயிர்வாழ்வேன்?’ எனக் கூறிக் கலக்கிக் கண்ணிf சொரிந்தாள்.

1 யாரும் இல்லை; தானே கன்வன்;

தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால, ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே ,

நானும் நன்னெஞ்சு உடையான் நின்தலைவன் :

காதலன் காதல் உறவை மறந்து கைவிடுவனே என அவள் கலங்குவதைக் கண்டாள் தோழி. அவன் எத்தகை யன் என்பதைத் தோழி அறிவாள்; அவன் நல்லன் என்பதை அறிந்த பின்னரே, அவர்கள் காதல் உறவு வளரத் துணை

a குறுந்தொகை: 25. கபிலர். அது-அக்காதலை, எவன்-யாது; செய்கோ-செய்யவல் லளுே; சிறுபசுங்கால.சிறிய பசிய கால்களை உடைய, சிறு பசுங்கால குருகு, ஆரல் பார்க்கும் குருகு எனத் தனித் தனியே கூட்டுக. ஆரல்-ஒருவகை மீன்; மணந்த ஞான்றுமணந்த காலத்தில்,

  • .