பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

புரிந்தவள் அவள், அதனல், அவன் நல்லன், நீ நினேயு மாறு உன்னை நிலைகெடக் கைவிடுவானல்லன்; குறைகூரு முன்பே குறிப்பால் அறிந்து அக்குறை போக்கும் குணம் உடையவன்’ என்பதை அவளுக்கு அறிவிக்க விரும்பினள்.

பெண்ணே உன் காதலன் உயர்ந்த பண்புடையவன்; தன் கடனறிந்து நடந்துகொள்ளும் தகுதி வாய்ந்தவன்; அவன் நெஞ்சம் என்றும், எவர்க்கும் நல்லதையே என்னும் நல்ல நெஞ்சம், நல்லன் எனப் பாராட்டற்குரிய பண்புகளே யெல்லாம் ஒருங்கே பெற்றவன். களவொழுக்க வாழ்வில் உனக்கு உண்டாம் ஏதங்களே, ஒருநாள் அவனுக்கு எடுத் துரைத்தேன். அதைக் கேட்டு அவன் உள்ளம் வருந்தியதை நான் என்னென்று கூறுவேன். எனக்குப் பேரின்பம் நல்கு கிறது எனும் நினைவால் பிறர் துயரை அறியாது போன என் இழிவு கண்டு உள்ளம் நானுகிறது. இதை இன்றே கைவிட் டேன். களவொழுக்க வாழ்க்கை எத்துணைப் பேரின்பம் நல்கு வதாயினும் இனி அதை விரும்பேன்; அவள் இடர் நீங்கி இன் புறும் வண்ணம், வரைவிளே விரைந்து மேற்கொள்வேன்; இனி அதுவே குறியாய் இருந்து முயல்வேன்; என உறுதி யளித்தான். அளித்த உறுதியை ஆழியாது காக்க, அன்றே வரைபொருள் சேர்க்க வெளிநாடு சென்முன்; அவ்வாறு நானும், நற்பண்பும், நல்ல உள்ளமும் உடையானே ஐயுறல் அழகாகாது; அவன் அத்தகையன் அல்லன்’ எனக் கூறி, அவளே ஆற்றுவித்தாள். -

அவ்வாறு அவன் பெருமையைப் பாராட்டி, அவள் துயரைப் போக்குவாள். அவன் மநைாட்டு மாண்பினைக் கூறு வாள்போல், அவன் மாண்பின இனிது எடுத்துக் கூற விரும் பினள். அதனல், அவன் நல்லன்; நானும் நெஞ்சுடையன்” எனக் கூறியதோடு நில்லாது, பெண்ணே அவன் மநைாடு காந்தட் செடிகளை நிறையக் கொண்டது. அக்காந்தளுக்கு ஏனைய செடிகளுக்கில்லாச் சிறப்பு ஒன்று உண்டு. மலரும் பருவம் வந்ததும் தாமே மலரும் அதன் பேரரும்புகள், சில