பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



காதல் இன்றேல் சாதல் :

காதலர் விரைந்து வாராமையால், தன் உயிர் இழக்கும் நிலையும் வந்துறும் எனக்கூறி வருந்திய அப்பெண், காதலர் வினை முடித்து மீண்டு வந்து வரைந்து கொள்ளும்வரை காத் திருத்தல் இயலாதோ? விரைந்து வந்திலர் என்பதற்காக வருந்தி உயிரிழத்தல் வேண்டுமோ” எனத் தோழி இடித் துரைத்தாலும் கூடும் என எதிர்நோக்கிளுள். அதனல், அவள் அவ்வாறு கூறி அறிவூட்டுவதற்கு முன்பே, அது இய லாது; காதல் காத்திருக்கக் கூடியதோ, காணுதிருக்கக் கூடி

யதோ அன்று’ என்பதை அவளுக்கு அறிவுறுத்த விரும் பினுள். -

தோழியை மீண்டும் நோக்கினுள். பதோழி! யாமைப் பார்ப்பு, தாயின் முகம் நோக்கி வளரும் இயல்புடையது; தாய் முகம் நோக்கும் வாய்ப்பு அற்றுப் போமாயின் அது வளராது; வாழாது. தாய்ப் பறவை இட்ட ஒரு முட்டிை, அப்பறவை அதை, இடைவிடாது அடைகாத்துக்கிடந்து பாதுகாப்பதிஞனேயே குஞ்சாகி உயிர்பெற்று உலாவும். தாய்ப் பறவை அவ்வாறு அடைகாவாதுவிடின், குஞ்சு உருப் பெருது; முட்டை அழுகி அழிந்துபோகும். இவ்வுயி ரியல்பைத்,தோழி! நீ அறிவை, தோழி யாமைப் பார்ப்பு, தாய் முகம் நோக்கி வளர்வதே போல், காதலும், காதவரை இடைவிடாது கண்டு மகிழ்வதால் வளருகிறது. தாய் முகம் நோக்காத வழிப், பார்ப்பு அழிவதேபோல், காதல், காத லரைப் பார்ப்பதின்றேல் குன்றிக் குறைந்து மறைந்து போம். தாய்ப் பறவை இடைவிடாது இருந்து அடைகாப் பதால் முட்டை குஞ்சாகிப் பயனடைகிறது. அதுபோல், காதலர் இருவரும் மணந்து, பிரிவின்றி இடைவிடாது இருந்து வாழ்வரேல், காதலும், மேன்மேலும் வளர்ந்து இல் லறமாம் நல்லறப் பயன நல்கும். அவர்க்கு, இடையீடு இன்றி வாழும் வாய்ப்பு இன்றாயின் தாயின் காவலைப் பெருத முட்டை அழிவதுபோல், அவர் காதல், இல்லறப் பயன் தாராது அழிந்து பாழாம்; ஆகவே தோழி! நானும் அவரும்