பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fo

உரியவன் என்றாலும், அதைத் தான் அறிந்திருந்தது போன்றே அப்பெண்ணும் அறிவாள் என்றாலும், அவள் உள்ளம், அவன் வாராதிருக்கும் நாட்கள் வளர வளர, நிலை கொள்ளாது நெடுந்துயர் கொள்ளும்; அந்நிலையில் எதைக் கூறினும் அவள் உள்ளம் ஏற்றுக் கொள்ளாது; காதல் பொய்த்துப் போமாளுல் தன்னிலை என்னும் என எண்ணிப் பார்க்கும் அவள் உள்ளத்துயர்க்கு ஒர் எல்லை காணல் இய லாது என்பதையும் அறிந்தவள் தோழி. அதனல், அவள், ‘நான் கூறிய அத்தனை அறவுரையும், அளித்த அத்தனை உறுதியும் பயனிலவாயின; இவள் அவை கேட்டும் அடங்கின கால்லள்; இனி, இவளுக்கு ஏதும் கூறேன்; இவளை ஆற்றி பிருக்கப் பண்ணுவதும் என்ஞல் ஆகாது” என வெறுத்துக் கூறி ஒதுங்கிவிடாள். அது, அவள் தோழியாம் தகுதிக்கும் இழுக்காம். -

காதல் பயன் தாராது எனக்கொண்டமையால், சாகத் துணிந்து நிற்கும் அந்நிலையிலும், அவ்வுயர் குடிப் பெண், தன் காதலன்னப் பிறர் பழிக்கப் பார்த்திராள். அவர் அவனைப் பழிக்கக் காரணமாயது யாது எனக் கண்டு, அதை அகற்ற முன் வருவள்: அம்முயற்சியில் வாராதிருந்து வருத்தும் அவன் கொடுமையைச் சிறிதே மறப்பதும் செய்வள் என் பதைப் பிறந்த நாள். தொட்டு அப்பென்ளுேடு சேர்ந்து பழகிய தோழி அறிவாள். அதனல், அளித்த உறுதிகளும், அறிவித்த அறவுரைகளும் பயனற்றுப் போனதும், புதுமுறை பொன்றைத் தேர்ந்துகொண்டு அவள்பால் சென்றாள்.

சென்றவள் பெண்ணே! யானைக் கன்றுகளை நீ பார்த் திருக்கின்றாய் அல்லவா’ எனத் திடுமென ஒன்று வினவிள்ை. தன் காதல், காதலன், அவன் செய்யும் கொடுமை ஆகிய வற்றுள் எது குறித்தும் பேசாது, யானைக் கன்றுகள் குறித்துப் பேசசெடுப்பது கண்டு, தோழி கூறத் தொடங்குவது, தன் காதலோடு தொடர்பிலாத, யாதோ ஒரு புது நிகழ்ச்சி பொலும் என எண்ணி, அப்பெண், ‘ஆம் பார்த்திருக்கி